மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கோ, ஆளுனர்களுக்கோ எந்த காலவரையும் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பளித்து ஆரெஸெஸ் ரெவி போன்ற ஆட்டுத்தாடிகள் தங்கள் அயோக்கியத்தனத்தை தொடர ஊக்க டானிக் கொடுத்த தீர்ப்பை எழுதிய நீதியரசர் யார்?
தெரியாது.
யார் எழுதியது என்று அதில் குறிப்பிடப்படவில்லை.
ஒருவருக்கு மேற்பட்ட நீதிபதிகள் அமர்வென்றால் அத்தீர்ப்பை எழுதிய ஜட்ஜ் யார் என்பது அதிலே குறிப்பிடப் பட்டிருக்கும்.
ஆனால் ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த இத்தீர்ப்பில் அந்த விபரம் சொல்லப்படவில்லை.
ஏன்?
ஜனநாயகத்திற்கு எதிராக, ஆட்டுத்தாடிகளின் அராஜகத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கிறோம் என்ற குற்ற உணர்வா?
இதற்கு முன்பும் இப்படி நிகழ்ந்திருக்கிறது.
பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம். மசூதிக்கு கீழே ராமர் கோயில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரம் எதுவும் இல்லை என்று சொல்லிக் கொண்டே பாபர் மசூதியை இடித்த கிரிமினல் குற்றவாளிகளிடமே பாபர் மசூதி நிலத்தை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒப்படைத்த அந்த ஐவர் அமர்வு தீர்ப்பிலும் யார் எழுதியது என்பது சொல்லப்படவில்லை.
இதுதான் உச்ச நீதிமன்றத்தின் வெளிப்படைத்தான்.
"ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்யறான்" என்ற ரஜினி பட பஞ்ச் வஜனம் போல கடவுளைக்கேட்டேன், அவர் உத்தரவிட்டதை எழுதினேன் என்று மோடியை வீட்டுக்கு அழைத்து பூஜை செய்ய வைத்த முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பின்னாளில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது வேறு கதை. . . .

No comments:
Post a Comment