நேற்று ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி ஒன்று.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை "தேசியத் தலைவர்" என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளதாம்.
காமராஜர் பற்றி தவறாக சித்தரித்துள்ளதால் அத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஒரு நாடார் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை செய்யக் கோரியுள்ளது என்பதுதான் அந்த செய்தி.
அப்படி என்ன தவறான செய்தி அத்திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளதாம்?
அந்த காலத்தில் தேர்தலில் நிற்க சொத்து வேண்டுமாம். காமராஜரிடம் எதுவும் சொத்து கிடையாது. காமராஜரின் அன்னை பெயரில் இருந்த நிலத்தை காமராஜர் பெயருக்கு மாற்றித் தர தேவர் சொன்ன போது அவர் தன் மகள் திருமணத்துக்கு அந்த நிலம் தேவை என்பதால் மறுத்து விட்டாராம். ஏனவே முத்துராமலிங்க தேவர் காமராஜருக்காக ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி அதற்கு காமராஜர் பெயரில் ரசீது வாங்கினார். அந்த அடிப்படையில்தான் காமராஜர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
இந்த தகவலை இதற்கு முன்பு வாட்ஸப்பில் உலா வந்திருக்கிறது.
இந்த தகவல் பொய்யானது, ஆதாரமற்றது, காமராஜர் மீது அவதூறு பரப்புகிறது என்பது வழக்கின் மையக்கருத்து.
நான் கூட
தலித் தலைவர் இமானுவேல் சேகரன் கொலை தொடர்பாக முதல்வராக இருந்த காமராஜர் முத்து ராமலிங்கத் தேவரை கைது செய்ய உத்தரவிட்டது,
முதுகளத்தூர் கலவரங்களை அடக்காமல் வேடிக்கை பார்த்தது.
கீழ்த்தூவல் என்ற இடத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் கண்களைக் கட்டி போலீஸ் சுட்டது என்ற குற்றச்சாட்டு ஆகியவை பற்றிதான் திரைப்படம் காமராஜரை உண்மயாகவோ, தவறாகவோ சித்தரித்துள்ளதோ என்று நினைத்தேன்.
கடைசியில் பார்த்தால் "ஆட்டுக்குட்டி" பிரச்சினை!
பிகு: மேலே உள்ள படத்தில் ஆட்டுக்குட்டியை கையில் வைத்துள்ள ஆள்தான் டுபாக்கூர் என்பது இன்றைய நிலவரம் என்றால் அந்த காலத்திலும் ஆட்டுக்குட்டி கதை டுபாக்கூர்தான் போல . . .

No comments:
Post a Comment