![]() |
இன்று காலையில் நாளிதழ் தாமதமாகத்தான் வந்தது. புதிதாக வெளியான திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சி பார்க்க கல்லூரி முதல்வர் கட் அடித்து விட்டு போனார் என்பது தலைப்புச்செய்தி.
இதெல்லாம் ஒரு தலைப்புச் செய்தியா என்று எரிச்சலுடன் பார்த்தால் முதல் பக்கத்தில் வந்தது ஒரு நூடுல்ஸின் விளம்பரம் என்றும் எல்லா செய்திகளுமே கிறுக்குத்தனமான செய்திகளாகத்தான் இருந்தன.
மத்த செய்தியை எல்லாம் கூட ஏத்துக்கலாம். இந்தியாவோட ஒட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி) வரலாறு காணாத அளவு உயர்ந்தது என்ற செய்தியை மட்டும் என்னால் மன்னிக்கவே முடியவில்லை.
மோடியோட ஆட்சியில பொருளாதாரத்தின் எல்லா அளவுகோள்களிலும் வீழ்ச்சிதான் ஏற்பட்டுள்ளதே தவிர எந்நாளும் உயர்ந்ததில்லை. உயரப் போவதும் இல்லை.
விளம்பரம்னாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா?


No comments:
Post a Comment