Tuesday, November 18, 2025

காலிஃப்ளவரும் கொலைகார சங்கிகளும்

 


"காலிஃப்ளவர் சாகுபடிக்கு பீகார் ஒப்புதல் அளித்து விட்டது" 


இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களின்  கண்டன அறிக்கைதான் அந்த காலிஃப்ளவர் சாகுபடியின் விபரீத அர்த்தத்தை உணர்த்தியது.


பீகார் மாநிலம் பகல்பூரில் 1989 ல் நடைபெற்ற கலவரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரை குடித்தது. அதில் 90 % மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். அங்கே லோகைன் என்ற கிராமத்தில் 116 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய சடலங்களை புதைத்து அந்த இடத்திற்கு மேல் சங்கி வெறியர்கள் காலிஃப்ளவரையும் முட்டைக் கோஸையும் பயிரிட்டு கொலைகளுக்கான தடயத்தை மறைத்துள்ளனர். 

இஸ்லாமியர்களை கொன்றதற்கும் அவர்கள் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தை காலிஃப்ளவர் பயிரிட்டு மறைத்தமைக்கும் பீகார் மக்கள் ஒப்புதல் அளித்து விட்டார்கள் என்று தேர்தல் முடிவுகளுக்கு விபரீத அர்த்தம் சொல்லும் அந்த சங்கி ஒரு சாதாரண முரட்டு, முட்டாள் சங்கி மட்டுமல்ல, அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்.

தாங்கள் செய்யும் கொலைகளுக்கு காலிஃப்ளவரை சங்கிகள் இழுப்பது இது முதல் தடவை அல்ல.

மாவோயிஸ்டு முத்திரை குத்தி போலி மோதல்கள் மூலம்  சத்திஸ்கர் மாநிலத்தில் மனித வேட்டை நடந்த போது கர்னாடக பாஜக ட்விட்டரில் ஒரு பதிவு போடுகிறது. அதிலே கொலைகார அமித்ஷா கையில் காலிஃப்ளவர். 


அராஜகக் கொலைகளை நியாயப்படுத்த காலிஃப்ளவரை பயன்படுத்துவது ஒரு புறம் இருக்கட்டும், 

தங்களின் அரசியல் எதிரிகளை கொலை செய்து அதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் போக்கு இருக்கிறதே, அது மிகவும் மோசமானது, அபாயகரமானது, அனைவரையும் அச்சுறுத்துவது.

சங்கிகள் கொலை பாதகப்பாவிகள் என்பதற்கு அவர்களே தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களை வெறுத்து ஓதுக்கித் தள்ள வேண்டிய மக்கள் ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைக்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் பெரும் துயரம். 

No comments:

Post a Comment