முன்னொரு காலத்தில் இந்தியாவில் இருந்த பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது கர்னாடகா, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் இருந்தது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், கோவா, பஞ்சாப், அஸ்ஸாம், ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கே உரிய மகத்தான சிறப்பான, கோஷ்டி மோதலால் அது ஆட்சியை பறி கொடுத்தது.
இப்போது கர்னாடகாவில் கோஷ்டிப் பூசல் உச்சத்திற்கு வந்துள்ளது.
முதலமைச்சர் சித்தராமையாவிற்கும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்குமான மோதல் இப்போது ஊடகங்களில் அடிபட தொடங்கி விட்டது.
இதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை. அடுத்த கட்சியின் உட்கட்சி பிரச்சினைகள் பற்றி எழுத மாட்டேன் என்று கொள்கை வைத்துள்ளதாக சொல்வாயே! இப்போது அந்த கொள்கை என்ன ஆனது என்று கேட்கிறீர்களா? அது நியாயமான கேள்விதான்.
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பார்த்த பதிவினால் காங்கிரஸாருக்கு அன்புடன் ஒரு எச்சரிக்கை கொடுக்க விரும்பினேன்.
வாயில் ரத்தம் சொட்ட சொட்ட, கர்னாடக ஆட்சியையும் கைப்பற்ற சங்கி ஓநாய்கள் ஆவலுடன் காத்திருப்பதை பார்த்தீர்களா!
இந்த பதிவை காணும் காங்கிரஸ் கட்சியினரே, காத்திருக்கும் அபாயத்தை உங்கள் தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.
உங்கள் கட்சிக்குள் ஒற்றுமையை பலப்படுத்துங்கள், ஓநாய்களை துரத்தி அடியுங்கள்.
பதவிக்காக மோதிக் கொண்டு இருப்பதையும் இழக்காதீர்கள். ஆட்சியை இழப்பது உங்கள் பலவீனத்தை மேலும் அதிகரிக்கும் என்பதையும் மறக்காதீர்கள், ஜனநாயகத்தையும் பலவீனமாக்கும் . . .


No comments:
Post a Comment