Saturday, November 22, 2025

சங்கிகள் -தமிழ்நாட்டின் துரோகிகள்

 


மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ திட்டங்கள் கிடையாது என்று ஒன்றிய அரசு அனுமதி மறுத்து விட்டது. 2011 ல் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த நகரங்களின் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கட்தொகை இருபது லட்சத்திற்கு குறைவாக உள்ள நகரங்களில் மெட்ரோ செயல்படும் போது மதுரைக்கும் கோவைக்கும் மட்டும் மறுப்பது மோடியின் அப்பட்டமான தமிழ்நாட்டு விரோத அரசியல்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் 2021 மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் நிச்சயம் இருபது லட்சம் கடந்திருக்கும். ஆக இவர்கள் மறுத்த காரணத்திற்கும் இவர்களே பொறுப்பு.

மத்தியரசின் செயலை சங்கிகள் கண்டிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நேர்மை இருந்தால் அந்த மூடர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!

முதலில் செய்தி தவறு என்றார்கள்.

அடுத்து விளக்கம்தான் கேட்டுள்ளார்கள் என்றார்கள்.

தமிழ்நாடு அனுப்பிய திட்ட அறிக்கை தவறு என்று வியாக்யானம் கொடுத்தார்கள்.

ஆனால்  இவர்களை மக்கள் எள்ளி நகையாடுவதால்

கோவைக்கும் மதுரைக்கும் எதற்கு மெட்ரோ என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் இப்போது அந்த ஒப்பாரியைத்தான் வைத்துக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் எதிரிகள், துரோகிகள். அவர்களை இந்த மாநிலத்திலிருந்தே துரத்த வேண்டும். 


No comments:

Post a Comment