அஸ்ஸாம் மாநில அரசு பல தார மணத்தை தடை செய்து சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.
முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இன்னொரு திருமணம் செய்பவர்களுக்கும்
அத்திருமணத்தை செய்து வைக்கிற
பூஜாரி, பாதிரியார், மௌல்வி ஆகியோருக்கும்
சிறைத்தண்டனை கிடைக்கிற வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மேலோட்டமாக பார்க்கையில் இது சரியான சட்டமாகவும் முதல் மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு தண்டனை கிடைக்க வழி வகுக்கும் சட்டமாகவும் தோன்றலாம்.
இந்த சட்டம் யாருக்கெல்லாம் பொருந்தாது என்று கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்தான் இச்சட்டத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
பழங்குடி இன மக்களுக்கும் ஆறாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்வது அந்த பகுதிகளில் உள்ளவர்களின் பழக்கமாக உள்ளதால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால் இஸ்லாமியர்களிடமும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்கிற பழக்கம் உள்ளதே! அதை அவர்களின் மதமும் அனுமதிக்கிறதே! (இன்றைய பொருளாதார சூழலில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் அரிதாகிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் யதார்த்தம்) அப்படி இருக்கையில் அவர்களுக்கும் விலக்கு அளிக்கலாமே!
பல தார மணம் செய்யும் ஆண்களிடமிருந்து பெண்களை காப்பதுதான் அஸ்ஸாம் பாஜக அரசின் நோக்கமாக இருந்திருந்தால் யாருக்குமே விலக்கு கொடுத்திருக்காது. பழக்கம் என்று சொல்லி ஒரு சாராருக்கு விதிவிலக்கு அளித்து அதே பழக்கம் உள்ள இன்னொரு சாராரை சட்டத்திற்கு உட்படுத்தினால் அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் உண்டு.
இஸ்லாமியர்களை அச்சத்திலேயே வாழ வைப்பது . . .
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவி மோடி வாஷிங் மிஷினால் சுத்தம் செய்யப்பட்ட ஆள்தான் அஸ்ஸாம் முதல்வர் ஹிமானந்த பிஸ்வாஸ்.
பரம்பரை சங்கிகளை விட மிகவும் மோசமாக பஞ்சத்துக்கு சங்கிகள் ஆனவர்கள் நடந்து கொள்வார்கள். இது அதற்கொரு உதாரணம்.
இதை நான் என் அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன்.

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஒரு திருட்டு பிச்சைக்காரனின் பதிவு நீக்கப்பட்டது
Delete