கரூர் நெரிசல் மரணங்களுக்குப் பிறகு ஓடி ஒளிந்து கொண்ட விஜய் கட்சியின் கொ.ப.செ ஆதவ் அர்ஜூனா, உசுப்பேத்தும்படி ஒரு ட்வீட் போட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அதை பயந்து நடுங்கி நீக்கியது நினைவில் உள்ளதல்லவா?
அந்த ட்வீட்டிற்காக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
என்ன காரணம் தெரியுமா?
எஸ்,வி.சேகர் பல வருட அனுபவம் கொண்ட, மாநிலம் முழுதும் அறியப் பட்ட ஒரு கலைஞர். அவரது பதிவுகள் தாக்கத்தை உருவாக்கும்.
ஆனால் இந்த ஆதவ் அர்ஜூனா அரசியலுக்கு புதியவர். அவர் சொல்வதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. ஆகவே வழக்கெல்லாம் தொடுக்க (வேண்டிய அளவு வொர்த்தில்லாத டம்மி பீஸ்) வேண்டாம் என்று காரணமும் சொல்லி விட்டார். (அடைப்புக்குள் இருந்தது மட்டும் என் வார்த்தைகள்).
"ஆதவ் அர்ஜூனா ஒரு கத்துக்குட்டி, அந்தாள் பேச்சையெல்லாம் எவனும் மதிக்க மாட்டான்" என்பதுதான் நீதிபதி சொன்னது.


No comments:
Post a Comment