மேலே உள்ளது துப்பாக்கி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி.
இந்தப் படம் என்றில்லை பெரும்பாலான தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் வில்லனிடமும் வில்லன் கூட்டத்திடமும் துப்பாக்கி இருக்கும். ஆனாலும் அவர்கள் முட்டாள்கள் போல வெறுங்கைகளால் சண்டை போட்டு ஹீரோவிடம் தோற்றுப் போவார்கள்.
அந்த முட்டாள் வில்லன்கள் போலவே பெரும்பாலான குண்டு வெடிப்புக்களை நடத்தும் தீவிரவாதிகள், எப்படி பாஜகவிற்கு தேர்தல் ஆதாயம் கிடைப்பது போல குண்டு வைக்கிறார்கள்!
இது என்னுடைய கருத்து இல்லை, ஒரு சந்தேகம், அவ்வளவுதான்.
நேற்று டெல்லி செங்கோட்டை வாயிலில் வெடிகுண்டு வெடித்து எட்டு பேர் இறந்த சம்பவத்திற்கும் இன்று பீகாரில் இறுதி கட்ட தேர்தல் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைதான். ஆமாம் இல்லைதான் . . .

No comments:
Post a Comment