Wednesday, December 16, 2015

அசிங்கப்படுத்த முயல்பவர்களே அசிங்கப்படுவார்கள்

 
 
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்கிற மோடியின் அரசு டெல்லியில் கேஜ்ரிவால் அறையில் தங்களின் ஏவல் ஆட்களான சி.பி.ஐ  மூலம் நடத்திய சோதனை என்பது அசிங்கமானது, அற்பத்தனமானது.
 
டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று தாங்கள் கண்ட கனவு பலிக்காதது மட்டுமல்ல, தங்களால் அற்பமான மனிதன் என்று கருதப் பட்ட அரவிந்த் கேஜ்ரிவால், மக்களின் பலத்த ஆதரவோடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அது முதல் மோடி அரசு அரவிந்த் கேஜ்ரிவால் மீது வெறியோடே அலைகிறது.
 
டெல்லி அரசு செயல்படுவதை எப்படியாவது முடக்க வேண்டும், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிரச்சினை மேல் பிரச்சினையாக உருவாக்க வேண்டும். அவர் தலையைப் பிய்த்துக் கொண்டு பதவியை விட்டு ஓட வேண்டும் என்பதுதான் மோடி கூட்டத்தின் ஒரே இலக்கு.
 
அந்த சதிகார கும்பலின் சமீபத்திய முயற்சிதான் நேற்று நடந்த சோதனை. 
 
ஆனால் இந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.
 
கேஜ்ரிவாலை அசிங்கப்படுத்த நினைத்தவர்கள்தான் இது ஒரு அரசியல் சதி வேலை என்று மக்களால் தூற்றப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கிறார்கள். 
 
கோழை என்றும் மன நோயாளி என்றும் கேஜ்ரிவால் குற்றம் சுமத்தியது நியாயம் என்பதை நிரூபிக்கும் வண்ணமே மோடியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
 
வருங்காலமும் அதனை உறுதி செய்யும்.
 
இனியாவது மோடியும் அவரது கூட்டாளிகளும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்களுக்கு உண்மையாக செயல்பட்டால் இனியாவது அசிங்கப்படாமல் தப்பிக்கலாம்.
 
ஆனால் அப்படியெல்லாம் அவர்கள் திருந்துவார்கள் என்ற மூட நம்பிக்கை எனக்கு கொஞ்சமும் கிடையாது. 
 
 
 
 

5 comments:

  1. ஒரு மாநிலத்தின் முதல்வர் ,,நாட்டின் பிரதமரை சைக்கோத்தனம் என்னுமளவிற்கு இருக்கிறது அரசியல்...

    ReplyDelete
  2. கையில வச்சுருக்க ஆயுதத்தாலயே ரெண்டு போட்டா சரியாயிடுவானுங்க

    ReplyDelete
  3. Picture is superb and appropriate

    ReplyDelete
  4. ஆனால் இந்த அசிங்கம் பிடித்த பேர்வழிகள் எந்த அவமானத்துக்கும் கவலைப்பட மாட்டார்கள். அந்த அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கி விட்டார்கள்

    ReplyDelete