Saturday, February 23, 2013

இளையராஜாவின் கோபம் நியாயமானது, பாலச்சந்தர் மவுனம் ஏன்?

 








சமீபத்தில் குமுதம் இதழில் இளையராஜாவின் கேள்வி பதில்
பகுதியில் தனக்கும் பாலச்சந்தருக்குமான பிரச்சினை பற்றி
எழுதியிருந்தார். 

புது புது அர்த்தங்கள் திரைப்படத்தினை அவசரமாக
வெளியிட வேண்டும் என்பதற்காக பின்னணி இசை அமைக்க
இளையராஜாவிற்காக காத்திருக்காமல், ஏற்கனவே அவர்
பல்வேறு படங்களில் இசையமைத்திருந்த டிராக்குகளை
பயன்படுத்தியதுதான் காரணம் என்று அவர் சொல்லியிருந்தார்.

இன்று ஒரு தொலைக்காட்சியில் புது புது அர்த்தங்கள் 
ஓளிபரப்பினார்கள். பின்னணி இசை கேட்கவே படம்
பார்த்தேன்.

இளையராஜாவின் இசை போலவே இல்லை. கொஞ்சம்
கூட பொருத்தமாகவே இல்லை. இதிலே ஜனகராஜ் வரும்
காட்சியில் புன்னகை மன்னன் பின்னணி இசை வேறு.

பல காட்சிகளில்  பின்னணி இசை அளிக்க வேண்டிய
உணர்வு மிஸ்ஸிங். சூப்பர் ஹிட் பாடல்களுக்கும்
 பின்னணி இசைக்கும் சம்பந்தமே இல்லை. 
இளையராஜாவிற்கு அவகாசம் அளித்திருந்தால்  
படம் இன்னும் சிறப்பாகக் கூட  அமைந்திருக்கும்.

டைட்டிலில் இசை இளையராஜா என்று போட்டிருப்பதால்
பின்னணியும் அவர்தான் என்று கருதும் பலரும்
விஷயம் தெரியாமல் இளையராஜா ஏன் இப்படி 
பின்னணி இசையில்  சொதப்பினார் என்றுதான் 
நினைப்பார்கள். 

எனவே இளையராஜாவின் கோபம் நியாயமானது.
இதற்கு வாய் திறக்காமல் பாலச்சந்தர் மவுனம்
காப்பது அவரின் தவறையே உணர்த்துகிறது.

ஆனாலும் இந்த இருவரும் மீண்டும் இணைந்து
சிந்து பைரவி, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி
போன்ற சிறந்த பாடல்கள் கொண்ட படங்களை
அளிக்க வேண்டும் என்றுதான் மனம் ஏங்குகிறது.

7 comments:

  1. their time gone. even i they unite they wont create that magic again. time changed taste too....

    ReplyDelete
  2. ராசா ஆடி அசைஞ்சு வர்றதுக்குள்ளே தயாரிப்புக்கு வாங்குன காசுக்கு வட்டி ஏறிவிடும்..அதைய அந்தாளு கொடுப்பாரா?

    ReplyDelete
  3. அதை ஏன் பாலச்சந்தர் சொல்லவே இல்லை?
    இளையராஜாவின் பெயர் வேண்டும், ஆனால் இசை தேவை இல்லை என்ற நினைப்பு.

    எனக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும்
    ஒரு நபர், தேவைப்படும் போது என் பெயரை மட்டும்
    பயன்படுத்திக் கொள்வார்.

    இது போன்ற நல்லவர்கள் தேசம் இது

    ReplyDelete
  4. அப்படி ஒன்று நிகழ்ந்திராவிடல் டூயட் திரைப்படப் பாடல்களை எங்கு கேட்டிருப்போம் , அஞ்சலி அஞ்சலி , என்காதலே என்காதலே எல்லாம் யாரால்முடியும் .....ரஹ்மானுடன் யாரையும் ஒப்பிட முடியாது

    ReplyDelete
  5. இளையராஜா வேண்டாம் என்றுதான் பாலசந்தர் ரகுமானை அறிமுகப்படுத்தினார். அதுவே ராசாவுக்கு பெரும் ஆப்பாகிவிட்டது!

    ReplyDelete
  6. மேதைகளுக்குள் மோதல்! என்ன சொல்ல!

    ReplyDelete
  7. பிடித்த இசையை கேட்க, ரசிக்கத்தான் தெரியும்... இசைத்தவரை அல்ல... இணைந்தால் இசைக்கு நல்லது...

    ReplyDelete