Thursday, February 7, 2013

ஒரு கொலை வெறியனின் ஒப்புதல் வாக்குமூலம்,



 என்ன செய்யப் போகிறது மத்தியரசு?

காவல்துறை பதினைந்து நிமிடம் கண்மூடி இருந்தால் எத்தனை தலைகள் உருளும் தெரியுமா என்ற ஹைதராபாத் ஓவைசியின் வெறி பிடித்த பேச்சிற்கு வி.ஹெ.பி யின் பிரவீன் தொகாடியா பதிலளித்து பேசியதை இன்னொரு வெறி பிடித்த பேச்சு என்று ஒதுக்கி தள்ள முடியாது.

ஏனென்றால் அஸ்ஸாமில், குஜராத்தில், மத்திய பிரதேசத்தில்  என்று வரிசையாக அடுக்கி விட்டு இங்கேயெல்லாம் போலீஸ் ஒதுங்கி இருந்தது, ஆயிரக் கணக்கில் பிணங்கள் விழுந்தன, அதில் ஒன்று கூட ஹிந்துவின் பிணம் அல்ல என்று கூறியுள்ளார்.

பரிவாரப் படை செய்த அட்டூழியங்களுக்கு அதன் தலைவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இது. காவல்துறை அவர்களின் அராஜகங்களுக்கு மௌன சாட்சியாய் இருந்தது என்பதையும் அவர் காட்டிக் கொடுத்துள்ளார்.

பிரவீன் தொகாடியாவையும் கலவரக் கொலைகளுக்கு உடந்தையாக இருந்த காவலர்களையும் மத்தியரசு என்ன செய்யப் போகிறது. இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் போகிறதா? இல்லை வழக்கம் போல் அலட்சியமாகவே இருக்கப் போகிறதா?

3 comments:

  1. தொகாடியா பேச்சை கேட்டு அதிர்ச்சியாகி பின்புதான் இவைகள் எல்லாம் எப்ப நடந்தது..என்று விபரம் தேட முயற்சித்தேன்.முடியவில்லை...அரசு கண்டிப்பாய் ரெண்டு பேர்மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.ஆனால் எடுக்காது...தேர்தல் வரும் என்று இருக்கும் சூழ்நிலையில் எந்தவித முஸ்லிம்,இந்து ஓட்டுக்கள் பாதிப்பதை காங்கிரஸ் விரும்பவே விரும்பாது...

    ReplyDelete
  2. இந்த பட்டியலில் ஹைதராபாத் ஓவைசி , பிரவீன் தொகாடியாவை தொடர்ந்து கேரள கொலைக்காரன் கம்யூனிஸ்ட மணியை காணவில்லையே. என்ன காரணம். உங்க ஆளுங்கிறதாலயா.

    ReplyDelete
  3. ஐயா, அனானி, தோழர் மணி வெறும் பேச்சு மட்டுமே. அதையே கட்சி ஏற்லவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்தது, கண்டித்தது. அரசும் அவரை கைது செய்தது. இந்த இருவர் இரு மதங்களுக்கிடையில் ரத்த் ஆறு ஓட வேண்டும் என்பதையே லட்சியமய் கொண்ட வெறியர்கள். உங்கள் உதாரணம் தவறு

    ReplyDelete