Tuesday, February 12, 2013

விற்பனைப் பொருளா கம்யூனிஸம்? ஒரு வெட்டிக் கேள்விக்கு சீரியஸான பதில்

வலைச்சரம் இதழிற்கான ஆசிரியர் பொறுப்பை கடந்த வாரம்
ஏற்றிருந்தேன்.

அங்கே நான் எழுதிய பதிவுகளின் இணைப்பு இங்கே

நன்றிகளோடு தொடங்குகிறேன் 

கேள்விகளுக்கு பதில் சொல்வார் யாரோ 

எங்களின் முன்னோடிகள் 

நாளை சந்திப்போம் 

பல உணர்வுகளின் சங்கமமாய் 

தேசம் ஸ்தம்பிக்கும் நேரம் 

கவிதை கேளுங்கள் 

 இந்த அறிமுகமும் அவசியம்

சில எம்.பிக் களும் ஒரு எம்.எல்.ஏ வும் 

வாழ்த்துக்களுடன் 

ஆகிய பதிவுகளை அங்கே எழுதினேன். நேரம் கிடைக்கையில்
படித்து பாருங்கள். 

எனது அனுபவங்களையும் எங்கள் சங்கத்தைப் பற்றியும்
நான் ரசித்த பல பதிவர்கள், இடுகைகள் பற்றியும்
எழுதியிருந்தேன்.

பொதுவாக நல்ல வரவேற்பு இருந்தது. 

ஆனால் கடைசி பதிவு எழுதிய பின்பு ஒரு நண்பர்,

குட் பை, இங்கே யாரும் கம்யூனிஸத்தை வாங்க
மாட்டார்கள், வேறு எங்காவது முயற்சி செய்யுங்கள்
என்று எழுதியிருந்தார்.

ஆசிரியர் குழுவே நாகரீகம் கருதி அந்த
பின்னூட்டத்தை  அகற்றி விட்டனர்.

ஆனாலும் அந்த பின்னூட்டம் நெருடலாகவே இருந்ததால்
சில வார்த்தைகள் மட்டும் இங்கே.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்ட போது 
மார்க்சும் ஏங்கல்சும் ஐரோப்ப முதலாளித்துவத்தின்
மனதை கம்யூனிஸ்ட் எனும் பூதம் ஆட்டி வைக்கிறது
என்று துவங்கியிருப்பார்கள்.

சில தமிழன்களையும்  அந்த தத்துவம் பூதமாய்
அச்சுறுத்துகிறது போல.

கம்யூனிஸம் ஒரு தத்துவம், வாழ்க்கை நெறி,
பிரச்சினைகளுக்கான காரணம் என்ன என்று
அலசி தீர்வை சொல்லும் வழிகாட்டி.

உலக நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும்
முதலாளிகள்   ஏதெனும் தீர்வு கிடைக்குமா
என்று நாடியது  மூலதனம் நூலைத்தான்.
போப்பாண்டவர் பரிந்துரைத்ததும்
அதைத்தான்.

அமெரிக்காவின் அருகாமையில் உள்ள நாட்டு
மக்களுக்கெல்லாம் உண்மை புரிந்ததால்
அவை செம்மயமாய் மாறிக் கொண்டிருக்கிறது.

கம்யூனிஸம் என்பது எங்களைப் பொறுத்தவரை
தத்துவம், கொள்கை, இலக்கு, விற்பனைப் பொருள்.
 

சரி இவ்வளவு வெறுப்பை உமிழ்ந்துள்ள,
காமாலைக் கண்ணோடு பார்த்த
அந்த புண்ணியாத்மா எந்த கொள்கை வழியை
பின்பற்றி வருகிறது என்று பார்த்தால்
வலைப்பக்கம் என்றெல்லாம் எதுவும்
எழுதவில்லை.

வெட்டியாக விமர்சனம் மட்டுமே செய்து
கொண்டு காலத்தை ஓட்டும் பேர்வழி
போலும்!

இங்கே வந்தால் இனி பதில் கிடைக்காது,
ஏனென்றால் எனக்கு நிறைய வேலை உள்ளது.
 

 

1 comment:

  1. தோழர், உண்மையான கம்யூனிஸ்ட் என்று யாரும் தன்னை பிரகடனப் படுத்தி கொள்ள முடியாது... வேண்டும் என்றால் சோசியலிஸ்ட் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்... சில ஆண்டுகள் வலைபூ பக்கம் வராமல் இருந்தேன்... ஆகையால் உங்கள் வலைச்சர பதிவுகளை அன்றே படிக்கவில்லை.. ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருந்ததால் கடைசி பதிவை படித்தேன்.. நாடக த்தை ரசித்தேன்.. ஆனால் காந்தி கோபப் பட்டிருப்பார் என்ற கற்பனையை தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. ஆங்கிலேயர்களின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்று எத்தனையோ வழிகளில் குனிந்து சென்றவர் அவர் என்பது என் கருத்து...

    ReplyDelete