Tuesday, February 5, 2013

ஒரு கண்ணின் பார்வை பறிக்கப்பட்ட பின்பும்





இன்று காலை தீக்கதிர் நாளிதழை படிக்கும் போது மனதில் மகிழ்ச்சி பொங்கியது. திருச்சியில் நேற்று நடந்து முடிந்த சி.ஐ.டி.யு சங்கத்தின் தமிழ் மாநில மாநாட்டில் அந்த அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளராக தோழர் ஜி.சுகுமாறன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

என்.எல்.சி நிறுவன ஊழியராய் தொழிற்சங்கப் பணியை துவக்கிய தோழர் சுகுமாறன் கடலூர் மாவட்ட சி.ஐ.டி.யு செயலாளராய் பணியாற்ற என்.எல்.சி வேலையை துறந்தவர். கடலூர் நகரில் ஒரு தனியார் ஆலை தொழிலாளர்களை பணி நீக்கம் செய்த போது நடைபெற்ற போராட்டத்தின் போது, முதலாளிகளிடம் எலும்புத் துண்டுகள் பெற்று காவல்துறை போராட்டம் நடத்தியவர்களை மிகக் கடுமையாக தாக்கியது.

காவல்துறையின் அராஜகத் தாக்குதலில் தோழர் சுகுமாறனின் இடது கண் பார்வை முழுமையாக பாதிக்கப்பட்டது. அரக்கத்தனமாக நடந்து கொண்ட அந்த காவல்துறை ஆய்வாளர் மீது அன்று ஐயாவும் நடவடிக்கை எடுக்கவில்லை, இன்று அம்மாவும் நடவடிக்கை எடுக்க வில்லை.

ஆனால் உருக்கு போன்ற உறுதி கொண்டவர்களை எந்த தாக்குதலும் நிலை குலையச் செய்யாது என்பதற்கான உதாரணமாக தோழர் சுகுமாறனின் பணி தொடர்ந்தது. இதோ இன்று அவர் சி.ஐ.டி..யு சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராகவே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

தோழரது பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

2 comments:

  1. பாராட்டப்பட வேண்டியவர்... அவருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தோழரது பணி சிறக்கவாழ்த்துக்கள்.

    ReplyDelete