Tuesday, February 19, 2013

ராஜீவிற்கு தப்பாமல் பிறந்த ராகுல்

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி 
ஆகியோரிடம்  ஊறிப்போயிருந்த  ஆணவம்
ராகுல் காந்தியிடமும் அப்படியே உள்ளதை
அம்பலப்படுத்தும் கட்டுரை .

இதுதான் குடும்ப பாரம்பரியம் போலும்

தந்தை எப்படியோ, தனயன் அப்படி... அரசியல் விமர்சகர்
 
திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துவிட்டது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘இந்துஸ்தானி லிருந்து’ அகற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ‘இடிமுழக்கம்’ செய்திருக் கிறார். உண்மையில், வரலாறு திரும்பிக் கொண்டிருக்கிறது. 1986இல் மேற்கு வங்க சட்டமன்றத்திற்குத் தேர்தல்கள் நடை பெற்றபோது, அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ‘‘கல்கத்தா ஒரு இறந்து கொண்டிருக்கும் நகரம்’’ என்று இகழ்ச்சியாகக் குறிப்பிட்டதை அனைவரும் அறிவோம். ஆனால் அத்தேர்தலில் இடது முன்னணி பெரு வாரியாக வெற்றி பெற்றது மட்டு மல்ல, அதற்கு அடுத்து நடைபெற்ற நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் மூன்றில் இரு பங்குக்கும் மேலாக இடங்க ளைப் பெற்று தொடர்ந்து வெற்றி வாகை சூடிவந்தது.தந்தை எப்படியோ, தனயனும் அப்படி. ராகுல் காந்தி இவ்வாறு கூறியிருப்பதி லிருந்து வரலாறு மீண்டும் திரும்பி இருக் கிறது என்பதுதான் மெய்ப்பிக்கப்பட்டிருக் கிறது. சென்ற முறை மிகவும் துயரார்ந்த முறையில் இருந்ததைப் போலவே, தற்போது இரண்டாவது தடவையும் நகைக்கத்தக்க விதத்தில் இருக் கப்போவதை காத்திருந்து தெரிந்து கொள் வோம்.நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது இவ்வாறு அச்சுறுத்தல்கள் விடப்படுவதைக் கேட்டு இப்போது நமக்கு மிகவும் சலித்துவிட்டது. காங்கிரஸ் கட்சி மிகவும் செல்வாக்காக இருந்த காலங்களில், 1980இல் மத்தியில் மீண் டும் ஆட்சிக்கு வந்த சமயத்தில், இதே போன்றுதான் குரைத்தது. 


வங்கத்தைச் சேர்ந்த அக்கட்சியின் குறிப்பிடத்தக்க தலைவர் ஒருவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை வங்காள விரிகுடாவில் தூக்கி எறிய வேண்டும் என்று அப்போது கூறினார். ஆனால் அடுத்த முப்பதாண்டு களில் என்ன நடந்தது என்பது வரலாறு. காங்கிரஸ் கட்சிதான் அங்கே நொண்டத் தொடங்கியது இன்னமும் தொடர்கிறது. இதுநாள்வரையிலும் அதனால் அங்கே எழுந்து நிற்க முடியவில்லை.பிரதமர் திரிபுராவில் பிரச்சாரம் செய் திட திட்டமிட்டிருந்தார். வடகிழக்கு மாநி லங்கள் அனைத்திலும் திரிபுராவில்தான் மிகவும் சிறந்த முறையில் நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்று திரிபுராவை அவர் அடிக்கடி பாராட்டி வந்ததை மக்கள் நன்கு அறிவார்கள். இந்நிலையில் தற்போதைய இடது முன்னணியைத் தோற்கடிக்க வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள் என்று கேட்க வேண்டும் என்று மக்கள் தயாராகி இருந்தார்கள். பல் வேறு துறைகளில் திரிபுரா மாநில அரசாங்கம் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக மத்திய அர சாங்கம் பாராட்டுவது என்பது வழக்க மாகிவிட்டது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதலாவது மாநிலமாகப் பல்வேறு துறைகளில் திகழ்கிறது என்று அது அடிக்கடி கூறி வந்திருக்கிறது. 

மகாத் மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறு திச் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளிப்பதில் நாட்டிலுள்ள அனைத்து மாநி லங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்க ளிலும் மொத்தம் உள்ள 100 நாட்களில் சராசரியாக 86 நாட்கள் வேலை அளித்து, திரிபுராதான் முதல் மாநிலமாகத் திகழ்கி றது. அதேபோன்று பழங்குடியினர் வனச் சட் டத்தின் கீழ் ஆதிவாசிகளுக்குப் பட்டா வழங்கியதிலும் அனைத்து மாநில ங்களிலும் திரிபுரா மாநிலம்தான் முதலா வதாகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. சுமார் 95 விழுக்காட்டினர் அடையாளம் காண ப்பட்டு நிலத்திற்கும் வன உற்பத்திப் பொருள்களுக்கும் சட்ட உரிமை கொடுக்க ப்பட்டிருக்கிறது. இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 


இவ்வாறு அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வரும் திரிபுரா அரசாங்கத்திற்கு வாக்களிக்காதீர்கள் என்று கோருவது நியாயமல்ல என்று உணர்ந்திருப்பார் போலும். அதனால்தானோ என்னவோ அவர் பிரச்சாரத்திற்கு வராது தவிர்த்து விட்ட hர்.அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வருவார் என்று திரிபுரா மக்களுக்குச் சொல்லப் பட்டிருந்தது. உண்மையில், அவரது பிரச்சார நிகழ்ச்சிநிரல் ஊடகங்களின் வாயிலாக மிகவும் விரிவாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி மிகவும் ஏமாற்றம் அடையும் அளவிற்கு, அவரது பயணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இதற்கு அதிகாரப்பூர்வமாகக் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. எனினும் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை அடுத்து, எல்லை மாநிலம் ஒன்றில் பயணம் செய்ய வேண்டாம் என்று பாதுகாப்புக் காரணங்களைக் கூறி அவர் அனுமதிக்கப்படவில்லை என்று ஒரு தகவல் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இதுவும் வேடிக்கையான ஒன்றுதான். அவரது பாதுகாப்பிற்குப் பொறுப்பு ஏற்றிருப்பது, சிறப்பு பாதுகாப்புக் குழு (ளுஞழு-ளுயீநஉயைட ஞசடிவநஉவiடிn ழுசடிரயீ) அல்லது கறுப்புக் கமாண்டோக்கள் என்னும் படைப்பிரிவாகும். இதே படைப்பிரிவினர் தான் ராகுல் காந்தி பாதுகாப்புக்கும் பொறுப்பேற்றிருக்கிறது. பாதுகாப்பு அளிப்பதற்கு ஒருவருக்குப் பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ள சமயத்தில், அதே பாதுகாப்புக் குழு வேறொருவருக்கு மட்டும் பாதுகாப்பு அளித்திருப்பது எப்படி? பிரதமரைப் போலவே, சோனியா காந்தியும் வரலாறு படைத்து வரும் இடது முன்னணியைத் தோற்கடியுங்கள் என்று கூறுவதற்குத் தயங்கித்தான் வரவில்லை என்பது தெளிவு.காங்கிரஸ் கட்சி, கடைசியாக நாட்டின் பாதுகாப்பையே தங்களால்தான் காப் பாற்ற முடிந்திருக்கிறது என்று கூறிக் கொண்டு அதன்மூலம் அரசியல் ஆதா யம் தேட முயன்றுள்ளது. அப்சல் குருவின் தூக்கு கடைசியில் காங்கிரஸ் பிரச்சாரத் திற்குத் துணை புரிந்தி ருக்கிறது. 


ஆயினும், திரிபுராவில், காங் கிரஸ் கட்சியானது ஐஎன்பிடி என்கிற திரி புரா பழங்குடியினர் தேசியக் கட்சி (ஐசூஞகூ-ஐனேபைநnடிரள சூயவiடியேடளைவ ஞயசவல டிக கூசiயீரசய) என்னும் கட்சியுடன் கூட்டணி அமைத் துக்கொண்டிருப்பதும், அக்கட்சியின் தலைவர் கடந்த காலங்களில் திரிபுராவை இனரீதியாகத் துண்டாடுவதற்காக, நூற் றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த திரிபுரா தேசியத் தொண் டரணி (கூசூஏ-கூசiயீரசய சூயவiடியேட ஏடிடரவேநநசள) யின் கமாண்டர் என்பதும், அனைவரும் அறிவார்கள். இப்போது அவரும் இத் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக் கிறார். ஐஎன்பிடி கட்சியானது தடைசெய் யப்பட்டுள்ள தீவிரவாத திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (சூகுடுகூ) என்னும் அமைப்பின் அரசியல் பிரிவு என்பதும், அது முந்தைய காலங்களில் திரிபுரா மக் களை பழங்குடியினர் - பழங்குடியின ரல்லாதவர் என்று பிரித்து ஒற்றுமைக்கு வேட்டு வைத்து வன்முறை வெறியாட்டங் களில் ஈடுபட்டதும் திரிபுரா மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று. காங்கிரஸ் - ஐஎன்பிடி கூட்டணி என்பது ஒரு முரண் பாடு. அதனை காங்கிரஸ் கட்சி எவ்விதத் திலும் விலக்க முடியாது. இந்நிலையில் அதனால் எப்படி திரிபுரா மக்களை நம்பச் செய்திட முடியும்? அதனால்தான் காங் கிரஸ் கட்சியின் தலைவர் தன்னுடைய கட்சி 

வேட்பாளர்களுக்காக மாநிலத்திற்கு வந்து பிரச்சாரம் செய்திட முன்வராததில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. திரிபுரா வாக்காளர்கள் மத்தியில் மன தில் உள்ள இதுபோன்ற கேள்விகள் எதற் கும் பதில் கூறாமல் ராகுல் காந்தி மிகவும் எச்சரிக்கையுடன் தவிர்த்துவிட்டார். அவற்றிற்குப் பதிலாக, ஒரே பொய்யைத் திரும்பத்திரும்பச் சொல்லி உண்மை போன்று ஆக்கிடும் கோயபல்ஸ் பிர ச்சாரத்தில் இறங்கிவிட்டார். ‘மத்திய அரசு, திரிபுரா மாநிலத்திற்குத் தாராளமாக வாரி வழங்கியதாம், ஆனால் திரிபுரா மாநில அரசுதான் அவற்றைத் தங்கள் கட்சி நலனுக்காக துஷ்பிரயோகம் செய்து விட்டதாம்’ அளந்து விட்டிருக்கிறார். வட கிழக்கு மாநிலங்களிலேயே திரிபுரா மாநி லம் மட்டும்தான் வளர்ச்சிப் பணிகளுக் காகத் தனக்கு அளிக்கப்பட்ட நிதி ஒதுக் கீட்டை முழுமையாக, வளர்ச்சிப் பணி களுக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளன என்று மத்திய அரசும், வடகிழக்கு மாநி லங்களின் வளர்ச்சித்துறையும் அநேக மாக அவருக்குக் கூறி அவரைத் தெளிவு படுத்தி இருக்காது என்றே கருதுகிறோம். பிரதமரே பலமுறை இதனை எதிரொலித் திருக்கிறார். எப்படிப்பார்த்தாலும், மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி என்பது எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமானதல்ல, குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமானது அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழும், நிதிக் கமிஷனின் ஐந்தாண்டுகளுக்கான பரிந் துரைகளின் அடிப்படையிலும், மத்திய நிதி ஒதுக்கீடுகள் என்பவை அனைத்து மாநிலங்களுக்கும் மாற்றிக்கொடுக்கப்பட வேண்டியவைகளாகும். இது கட்டாயம். இதனை எந்த மத்திய அரசும் புறக்கணித் திடவோ, உதாசீனம் செய்திடவோ முடி யாது. 


ஆயினும் அரசியல்ரீதியாகத் தனக்கு எதிரானவை என்று கருதும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியை காலத்தே ஒதுக்காமல் சண்டித்தனம் செய்வது என்பது வழக்கம்தான். மேற்கு வங்கமும், திரிபுராவும் கடந்த காலங் களில் அடிக்கடி இவற்றை எதிர்கொண் டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலை வர் தேர்தல் பிரச்சாரங்களுக்குச் செல் லும் மாநிலங்களில் எல்லாம் இதே பல்ல வியைத்தான் பாடி வந்திருக்கிறார். பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத் மாநிலங்களி லும் இதையேதான் அவர் கூறினார். 


அவ் வாறு அவர் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்ட அனைத்து மாநிலங்களிலும் அவர் பரிதாபகரமான முறையில் தோல்வி அடைந்தார். திரிபுராவும் அதற்கு விதி விலக்காக இருக்கப்போவதில்லை. திரிபுரா மாநிலத்தில் திரிபுரா மக்க ளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதிமொழி களை வாரி இரைத்திருக்கிறது. இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குவார்களாம். நாட் டில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக் கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ்/வறு மைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடும் இன்றி மாதந்தோறும் ஒரு கிலோ 2 ரூபாய் விலைக்கு 35 கிலோகிராம் தானியங்களை வழங்கக்கூடிய விதத்தில் அனைவருக்குமான உணவுப் பாதுகாப் பைக் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கையை மறுத்து வருவது இதே காங்கிரஸ் கட்சிதான். ஆயினும், திரி புராவில் அதிலும் பாதி விலைக்கு அவற்றை வழங்கும் என்று உறுதி அளிக்கிறது. இளைஞர்களுக்குப் புதிதாக வேலை வழங்குவோம் என்றும் அது உறுதிமொழி கூறியிருக்கிறது. மத்தியில் இக்கட்சி பின்பற்றிடும் பொருளாதாரக் கொள் கைகள் கடந்த பத்தாண்டுகளில் நாட் டையே மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளி இருக்கிறது, நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் என்பது 5 விழுக்காட்டிற்கும் கீழே இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே இப்போது மதிப் பிடப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகள் கடுமையாகச் சுருங் கிவிட்டன என்பது தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. இவ்வாறு பொருளாதார அரங்கிலும் படுதோல்வி அடைந்துள்ள இக்கட்சிதான், திரிபுரா மக்களுக்கு வானி லிருந்து நிலாவைக் கொண்டுவந்து தரு வோம் என்கிற முறையில் வாக்குறுதி களை வாரி வழங்கி வருகிறது. திரிபுரா இன்றைய நிலையில் எழுத் தறிவு பெற்றோர் எண்ணிக்கையில் நாட் டில் நான்காவது மாநிலமாகத் திகழ்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் அநேகமாக திரிபுரா மட்டும்தான் அதிக அளவில் படித் தோர் எண்ணிக்கை யையும், பயிற்சி பெற்ற இளைஞர் பட்டாளத்தையும் பெற் றிருக்கிறது. இந்த இளைஞர் பட்டாளம் தங்களுக்கு ஆதாயபூர்வமான வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக் கிறது. 


இதனை நிறைவேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் இடது முன் னணி தன்னுடைய தேர்தல் அறிக்கை யில் மாநிலத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்மையங்களை உருவாக்கத் திட் டமிட்டிருக்கிறது. இது இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றி, அவர்களுக் குச் சிறந்ததோர் எதிர்கால வாழ்க்கையை அளித்திடும் என்கிற நம்பிக்கையையும் அவர்களுக்குத் தந்திருக்கிறது. எனவேதான், திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி வெற்றி பெறுவது என் பதிலோ அது திரிபுராவில் தொடர்ந்து ஏழா வது முறையாகவும் ஆட்சி அமைக்கும் என்பதிலோ ஆச்சரியப்படுவதற்கு எது வுமே இல்லை.


‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’(தமிழில்: ச.வீரமணி)

 நன்றி - தீக்கதிர் 19.02.2013

5 comments:

  1. உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
    சர்பத் - புதுக்கோட்டை
    கொல்லிமலை - தேன்
    குண்டூர் - மிளகாய்
    தஞ்சை - நெல்
    மல்லி - குண்டக்கல்
    கொல்லிமலை - அன்னாசி
    வேலூர்- தக்காளி மாதுளை துவையல்
    சின்னமனூர் - கெண்டைமீன்
    கோவில்பட்டி - கடலைமிட்டாய்
    பழனி - பஞ்சாமிர்தம்
    பண்ருட்டி - பலாப்பழம்
    வெள்ளியணை - அதிரசம்
    லாலாப்பேட்டை, சத்தியமங்கலம் - வாழைப்பழம்
    சேலம் - மாம்பழம்
    பொள்ளாச்சி - தேங்காய்
    ஒட்டன் சத்திரம் - கத்தரிக்காய்
    கொடைக்கானல் - பேரிக்காய்
    நெய்வேலி - முந்திரி
    மன்னார்குடி - பன்னீர்சீவல்
    மேச்சேரி - ஆடு
    ஊட்டி - உருளை
    உடன்குடி - கருப்பட்டி
    சவுதி - பேரீச்சம்
    குலசேகரன்- மரவள்ளிக் கிழங்கு,
    கொல்லாம் பழம் ,
    வாழைப்பழங்களில்
    ஏத்தம் பழம், செவ்வாழை,
    மற்றும் இதர வாழைப்பழ வகைகள்,
    அன்னாசிப்பழம், சக்கப் பழம்
    எந்த ஊரில் எது பேமஸ் என்று லிஸ்ட் போட்டேன் உங்களிடமும் பகிரலாமே என்று இந்தப் பதிவுக்கு பொருந்தாவிட்டாலும் போட்டிருக்கிறேன் அண்ணா,பொறுத்தருள்வீர்.
    நன்றி

    ReplyDelete
  2. அன்பார்ந்த அய்யா,

    கடல் படத்தில் ஒரு குருவானவரை ஊரார் நடத்தும் விதம் அதிர்ச்சிகரமாக காட்டப்பட்டுள்ளது . எக்காரணத்தைக் கொண்டும் ஒரு குருவனாவரை அடிப்பது , உதைப்பது , கிட்டத்தட்ட எல்லோருமே நாராச மொழியில் பேசுவது போன்றவை மணிரத்தினமும் , ஜெயமோகனும் பொதுவாக மீனவர்கள் படிப்பறிவற்றவர்கள் , முரடர்கள் , மரியாதை தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தியை தாண்டி எந்த கள ஆய்வும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது . முந்தைய காலங்களைப் போல குருவானவர் என்றால் பிரமிப்பும் , பக்தியும் இப்போது இல்லாதிருக்கலாம் . அதற்கு காரணம் இன்றைக்கு மிக அதிக அளவில் குருவானவர்கள் வருவது இந்த கடற்கரை கிராமங்களிலிருந்து தான் . இப்போது சொந்த குடும்பத்திலோ அல்லது ஒன்று விட்ட குடும்ப வட்டத்திலோ குறைந்தபட்சம் ஒரு குருவானவரோ அல்லது கன்னிகாஸ்திரியோ இல்லாத ஒரு மீனவ குடும்பத்தை பார்ப்பது அரிது .அந்த வகையில் பிரமிப்பும் பக்தியும் குறைந்து போயிருக்கலாம் .ஆனால் குருவானவரை ஏதோ வேண்டப்படாத விரோதி போல பார்க்கும் நிலை கண்டிப்பாக இல்லை .. சில ஊர்களில் சில குருவனாவர்களை ஏசுவதும் , அரிதாக சிறிது தாக்குவதும் நடந்திருக்கலாம் .ஆனால் இது போல ஊர்முழுக்க வசையும் தாக்குதலும் குருவனாவர் மீது நடப்பதாக காட்டுவது மீனவர் பற்றிய பொதுப்புத்தி என்றே நினைக்கிறேன். அதுவும் எடுத்தவுடனே அந்த பையன் பாதிரியாரை வசை மாறி பொழிவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை . அப்படி நடந்தால் கண்டிப்பாக மக்கள் பார்த்துக்கொன்டிருக்க மாட்டார்கள்.

    இத்தனைக்கும் ஜெயமோகன் என்ற பெரும் எழுத்தாளர் இந்த கடற்கரை சமூகம் வாழும் நிலப்பரப்பிலிருந்து 10 கிமீ தூரத்தில் வசிப்பவர் தான் அவர் என்ன இப்படி எழுதியிருக்கிறார் அல்லது புரிந்து கொள்ள இயக்குனருக்கு இப்படித் தந்திருக்கார்.

    ReplyDelete
  3. அது ஒரு புறம் இருக்கட்டும் தோழரே..
    இந்த 20 21 அகில இந்திய வேலை நிறுத்தத்தில்
    DREU கலந்து கொள்ள வில்லையே... CITUவில் தான் affilidate ஆகிய பெரிய சங்கம் என் தனி ஆவர்த்தனம் என்பதை சொல்ல முடியுமா...?
    R சந்திரசேகர்

    ReplyDelete
  4. ஈழப்போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் அவை தொடர்பான ஆதாரங்களையும் முன் வைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கையை கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்று அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழ் தேசிய அமைப்புகள். அப்படி ஒரு தீர்மானத்தால் ஏதாவது ஒரு பலன் இருக்க வேண்டுமானால், அந்த கண்டனத்தில் இந்திய அரசும் சேர்க்கப்பட வேண்டும். கொலைக் குற்றவாளியை கண்டனம் செய்யும் தீர்மானத்தை கொலைக்குத் திட்டம் போட்டுக் கொடுத்த சதிகாரன் ஆதரிப்பது எந்த விதத்திலும் நியாயத்தை நிலை நாட்டாது!

    ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து தனி ஈழம் அமைப்பதை இந்தியாவின் விரிவாக்க அரசியல் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது தெரிந்தும் இந்திய அரசுக்கு மனு கொடுத்து, மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுத்து, காங்கிரசு ஆட்சியை மாற்றி பாஜக ஆட்சியை கொண்டு வந்து ஈழத்தில் நியாயத்தை நிலை நாட்டலாம் என்று பேசுவது இந்தியாவின் குற்றத்தை மறைப்பதாகும்.

    ReplyDelete
  5. கப்பறு சாகரத்தின் உப்புற நிலையாய் ஏன் தான் இப்படி அப்பா பிள்ளையோ ? சொட்டவழங்ககிளி சீட்டி அடித்ததை போல மாட்டில் வேந்தர்கள் பேசவும் செய்வர். மந்திர புன்னகையிம் மணம் வீசும் மதுர ராகம் ஊற்றெடுத்த்தர் போல் இருந்ததுவா அவர்கள் தம் சிந்தனை ?

    வாட்சுருவின் வர்ண மெட்டுகள் தாமோ இது.

    ReplyDelete