Friday, February 22, 2013

மனுஷ்ய புத்திரன் சொல்வது சரிதான். வன்மம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.



முக நூலில் வரும் மோசமான தாக்குதல்கள் பற்றி எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நியாயமானது. மிகவும் சரியானது. அவரது கருத்துக்கள்  இங்கே.




""பேஸ் புக் என்பது உண்மையில் ஒரு எழுத்தாளன் செயல்படக்கூடிய ஊடகம்தானா என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது. என்னுடைய முக்கியமான சில நண்பர்கள் இதில் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே இதில் தொடரவேண்டியிருக்கிறது.

இதில் எழுதுவதைவிட கடுமையான விமர்சனங்களையெல்லாம் அச்சு ஊடகங்களில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்திருக்கிறேன். அதற்கான எதிர்வினைகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால் ஒரு போதும் இங்கே எழுதப்படுவது போன்ற ஆபாசமான வக்கிரமான வசைகளை எதிர்கொண்டதில்லை. அரசியல், சினிமா, சாதி, மதம் என எதன்மீதும் சிறு கேள்வி எழுப்பினாலும் அவ்வளவு வன்மமும் அருவருப்பும் மிகுந்த தாக்குதல்கள் மேற்கொள்ளபப்படுகின்றன. ஒரு கருத்தைச் சொல்கிற மனிதன் யார், அவனது இதற்கு முந்தைய செயல்பாடுகள் என்ன என்று எதுவும் தெரியாத லும்பன்களால் இந்த மீடியம் நிறைந்திருக்கிறது. இதில் போலிப் பெயர்களில் இருட்டிலிருந்து கல்லெறியும் கோழைகள் வேறு.

ரிசானா விவகாரத்தில் என்மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களுக்கு நான் இஸ்லாமியர்களின் நியாயங்கள் குறித்து எவ்வளவு எழுதியிருக்கிறேன் என்று தெரியாது. விஸ்வரூபத்தை விமர்சித்ததற்காக என்னை கருவறுக்க விரும்பிகிறவர்களுக்கு நான் கமல் ஹாசனின் கலைச் சாதனைகள் பற்றி எவ்வளவு எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன் என்று தெரியாது. வைகோவை அரசியல் சமரசங்களுக்காக அவரை லேசாக கிண்டல் செய்தால் என்னை பிய்த்து பிராண்டுகிறவர்களுக்கு நான் வைகோவைவின் சமூகப் போராட்டங்களைப் போற்றி உயிர்மையில் தலையங்கமே எழுதியிருப்பது பற்றி எதுவும் தெரியாது.

எதோ ஒரு வாக்கியத்தை படித்துவிட்டு இங்கே வந்து கல்லெறியும் பொறுக்கிகளைவிட ஒரு எழுத்தாளனாக என்னுடைய வேலைகள், பொறுப்புகள் மிகப்பெரியது. எரியும் பிரச்சினைகளுக்ககா இலட்சக்கணக்கான மக்ககளுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஊடகவியலாளனை மனதை இந்தப் பொறுக்கிகள் அவ்வளவு எளிதில் சிதைத்துவிடலாம் என்று நினக்கிறார்கள். தங்கள் ஆபாச செயல்பாடுகளுக்கு கருத்துகள் என்று வேறு பெயர் சூட்டிக்கொள்கிறாகள். நான் ஒரு கொடூரமான, ஜ்கனநாயக விரோத அமைப்புக்கு எதிராக யுத்தம் செய்துகொண்டிருக்கிறேன். என்னைப் போன்றவர்கள் எந்த பின்புலமும் இன்றி தனியாக இந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கான விலையை கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு நாளைக்கு இருபது பேரையாவது பிளாக் செய்து வருகிறேன். இந்த இடத்தை சுத்தம் செய்வது அவ்வளவு சோர்வாக இருக்கிறது.

என்னுடைய எண்ணங்களோடு கொள்ரவமாக உரையாட முடியாதவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்..

‘’ ப்ளீஸ்..கெட் அவுட்..’’  ""




எனது அனுபவமும் இதேதான். முகநூல் மட்டுமல்ல, வலைப்பக்கத்திலும் இதே கதைதான்.

பின்னூட்டம் என்ற பெயரில் கருத்தின் மீது முரண்படுவது என்பது வேறு. கடித்து குதறுவது என்பது வேறு. ஆனால் உருப்படியாக எதையும் எழுத இயலாதவர்கள், எழுதினாலும் போணியாகாதவர்கள், தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அனாமதேயங்களாக அபத்தமாக உளறுவது அதிகரித்தே வருகிறது.

அடுத்தவரை காயப்படுத்துவதில் இன்பம் காணும் சேடிஸ்டுகளுக்கு சூடு, சொரணை, மானம் என்று எதுவும் கிடையாது.

இவர்களது பின்னூட்டத்தை வெளியிட்டு அதற்கு பதிலளித்துக் கொண்டிருப்பதால் இன்னும் வேறு ஊக்கம் அடைந்து விடுகிறார்கள். எனவே இனி அபத்தமான எந்த ஒரு பின்னூட்டத்தையும் வெளியிடுவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

இந்த பக்கம் பிடிக்கவில்லையென்றால் இங்கே வர வேண்டாமே, எதற்கு அவர்கள் தங்களின் நேரத்தையும் விரயம் செய்து கொண்டு என்னுடைய நேரத்தையும் விரயம் செய்ய வேண்டும்?

9 comments:

  1. //ஒரு நாளைக்கு இருபது பேரையாவது பிளாக் செய்து வருகிறேன். //
    ---------ஹா...ஹா...ஹா.... "கருத்து சுதந்திரம் என்றால் என்ன" என்று கடைசியில் சகோ.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும் ஒருவழியாக "பொறுக்கிகள்" புரிய வைத்து விட்டனர் போலும்..! எனவே, ஒரு நாளைக்கு கருத்து சுதந்திரத்துக்கு எதிரான இருபது "பொறுக்கிகளை" பிளாக் பண்ணுவது நல்ல விஷயம்தான்..! வரவேற்கிறேன்..!

    ReplyDelete
  2. டிஸ்கி :
    பிளாக் செய்யப்பட்ட 'பொறுக்கிகளில்' அடியேனும் ஒருவன்.

    விஷயம் இதுதான் ===>>

    //"கரை ஒதுங்கிய கப்பலை பார்க்க ஓடிய முட்டாள் தமிழன் போல விஸ்வரூபம் படம் பார்க்கும் தமிழன் எல்லாம் முட்டாள்கள்" என்று அருமையாக ஸ்டேடஸ் போட்டு சொல்லிவிட்டு... இப்போது நீங்களே அந்த படத்தை எப்படி ஸார் பார்த்தீர்கள்..?//

    -----என்று அப்பாவியாக எனது கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி அவரின் ஸ்டேடஸில் கமெண்ட் போட்டது நான் செய்த பொறுக்கித்தனம்..! ஒகே..! நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. சூப்பரா பதில் போட்டு இருக்கீங்க. சபாஷ்

      Delete
  3. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~,

    நிஜமாகவே அவர் சொல்ல வந்தது என்ன என்று உங்களுக்கு புரியவில்லையா? :)

    ReplyDelete
  4. சின்மயி விவகாரத்தில் பிளாக் பண்ணிவிட்டு போகாமல் இதை எல்லாம் பெரிது படுத்துவதா என பேட்டி கொடுத்தவர்தான் இந்த கவிஞர்.

    தனக்கு வந்தா இரத்தம் அடத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா?

    ReplyDelete
  5. Noted lyricist and scriptwriter Javed Akhtar has criticised both media and cinema in the country for being "insensitive" towards the problems of the common man.

    "It is sad to note that this insensitivity (towards common man) on the part of the media and cinema also extends to politics and other spheres," Akhtar said while delivering a lecture in Bhopal.

    The Mumbai film industry has undergone a sea change from the time he entered it in the late 60s, Akhtar said, adding that when he first came to the metropolis, producers used to tell him that films should be written for those living in the small towns of the country.

    "Those producers knew that if a film succeeded in small towns, it was bound to be a hit," he said.

    These days producers are not even worried if their films are not screened in small towns, he regretted.

    "We are now living in an age of multiplexes where a ticket costs around Rs 500 and producers feel that if their film is a hit even for a week in big cities, it will be a success," the 68-year-old artist noted.

    Because of this thinking, now filmmakers are not concerned about majority of th.................

    ReplyDelete
  6. The twin blasts in Hyderabad underline how the politics of communalism has made India vulnerable to terrorism imported from Pakistan and executed by Indian extremists. While Union Home Minister Sushilkumar Shinde’s statement in parliament this afternoon throws little light on the Hyderabad terror attack, the imprint of the Indian Mujahideen (IM) seems clear.

    The hate speeches by politicians like Akbaruddin Owaisi and Praveen Togadia inflame communal tensions. Owaisi, an MLA, should be debarred from electoral politics. Togadia should not be allowed to enter it.

    I posted the following piece on September 10, 2011 shortly after the Delhi bomb blasts. What appears here is an edited excerpt of that article whose relevance is sharper than ever before.The twin blasts in Hyderabad underline how the politics of communalism has made India vulnerable to terrorism imported from Pakistan and executed by Indian extremists. While Union Home Minister Sushilkumar Shinde’s statement in parliament this afternoon throws little light on the Hyderabad terror attack, the imprint of the Indian Mujahideen (IM) seems clear.

    The hate speeches by politicians like Akbaruddin Owaisi and Praveen Togadia inflame communal tensions. Owaisi, an MLA, should be debarred from electoral politics. Togadia should not be allowed to enter it.

    I posted the following piece on September 10, 2011 shortly after the Delhi bomb blasts. What appears here is an edited excerpt of that article whose relevance is sharper than ever before.

    Respected Ram Sir,

    Please add your red thoughts on these issues......please do not eat Bringal more...

    ReplyDelete
  7. இந்த பக்கம் பிடிக்கவில்லையென்றால் இங்கே வர வேண்டாமே, எதற்கு அவர்கள் தங்களின் நேரத்தையும் விரயம் செய்து கொண்டு என்னுடைய நேரத்தையும் விரயம் செய்ய வேண்டும்?

    --

    உள்ளே நுழைந்து படித்தால்தானே தெரியும் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று. எனவெ வரவேண்டாமே என எப்படிச்சொல்லலாம்?அவர்கள் நேரத்தைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

    அடுத்து, தமிழ்மணம் பொது திரட்டி. அனைத்து பதிவுகளை எல்லாரும் படிப்பதற்காக. அங்கே வந்து ஏன் உங்கள் பதிவைப்போட்டு இவர்தான் படிக்கவேண்டும். அவர் கூடாதென்றால் எப்படி?

    அனாமதேயங்களுக்கென்றே பின்னூட்ட வசதியும் போடப்பட்டிருக்கிறது. அவர்களை வரவேண்டாம் என்றால், அதை நீங்கள் எடுத்து விடவும்.

    அடுத்து, பொது இடம், பொது மேடை, பொது விடயங்களைப்பற்றியக் கருத்துக்கள் என்றால் சொல்லடி வாங்கித்தான் தீரவேண்டும். அது அசிங‌க்மாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே கோபப்படலாம். தடுத்துவிடலாம்.

    முகம்மது எழுதியது அசிங்கமில்லை. ஆனால் தடுத்திருக்கிறார் மனுஸ்ய புத்திரன். இப்படி எத்தனை பேரை இவர் தடுத்து தான் சொன்னவை சரியென்ற போலிப்பிம்பத்தைக் காட்ட முனைந்திருக்கிறார்? இதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

    எழுத்தாளர்கள் தங்கள் நூலகள் படிக்கப்பட்டவுடனே தங்களை மற்றவருக்கில்லா தகுதி தமக்கு வந்து விட்டதாகக் கற்ப்னை பண்ணி, ஆகாயத்திலிருந்து பூவி வரையிருக்கும் எல்லாவற்றையும் பற்றிக்கருத்துக்களை எழுதிவிட்டு அதை எவருமே எதிர்க்காமல் ஏற்க வேண்டுமென்றால் எப்படிச் சரியாகும்? உமக்கு ஈகோ இருந்தால் மற்றவனுக்கு இருக்காதா?

    இணயதளம் சுயமாக எப்படி பதிவைப் பாதுகாப்பது என்றெல்லாம் சொல்கிறது. அதன்படி, மனுஸ்யபுத்திரன் தன்னைச்சுற்றி ஒரு கோட்டைகட்டிக்கொண்டு பாதுகாத்துக்கொள்ளலாமே?

    உலகம் மாறாது. நாம்தான் மாறித் ந‌ம்மைப் பாதுக்காத்து க்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  8. கருத்தோடு மோதத் தெரியாத கோழைகள், கருத்திடுவோனின் உள்ளத்தை கிழித்து குதறிவிடும், விவேகமற்ற சமூகத்தின் எதிர்வினை.. மனுஸ்ய புத்திரனை கேவலமாக திட்டிய பிஜே போன்றோரை எல்லாம் பின்பற்றினால் அதுகளும் அதையே செய்யும். பேஸ்புக் ஆயாசம் தரவல்லது என்பதை உணர்ந்துள்ளேன். சற்றே கதவை அடைத்து வைத்தால் தனிமை வெளி சமூக ஊடகங்களில் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete