ஜெ வின்
பிறந்தநாளை நேற்று ரத்தத்தின் ரத்தங்கள் பக்தி சிரத்தையோடு விமரிசையாக கொண்டாடி தீர்த்து விட்டார்கள்,
எங்கெங்கு காணினும் ப்ளெக்ஸ் பேனர்கள், அங்கங்கே படம் வைத்து லவுட் ஸ்பீக்கரில்
பாடல்கள் முழங்கின, சில ஊர்களில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க யோகம். அன்ன
தானம், அபிஷேக வகையற்றாக்களுக்கும் குறைவில்லை.
நேற்று
முக்கியமாக நான் கவனித்த ஒரு அம்சம்.
நேற்று
முழுதும் ஒரு நிமிடம் கூட மின்சார வெட்டே கிடையாது. தீபாவளி, பொங்கலுக்காவது
இரண்டு மணி நேர மின் வெட்டு இருந்தது.
நேற்று
முழுமையும் தடையற்ற மின்சாரம் கிடைத்தது.
அதனால்தான்
சொல்கிறேன்.
அம்மா
பிறந்தநாளை தினந்தோறும் கொண்டாடுங்கள்,
குறைந்த
பட்சம் எங்களுக்கு மின்சாரமாவது கிடைக்கும்
No comments:
Post a Comment