“’ நானொரு
ராசியில்லா ராஜா “ என்ற பாடலை
வாய்க்கொழுப்பு மிக்க ராகுல் காந்திக்கு பார்ஸல் அனுப்பலாம் என்றுள்ளேன்.
மிகுந்த
ஆணவத்தோடு திரிபுரா மாநிலத்தில் சுற்றி சுற்றி பிரச்சாரம் செய்து மார்க்சிஸ்ட்
கட்சி அரசுக்கு எதிராக விஷம் கக்கிய ராகுல் காந்திக்கு திரிபுரா மாநில மக்கள் நல்ல
சவுக்கடி கொடுத்துள்ளனர். இடது முன்னணி அரசை மீண்டும் பிரம்மாண்டமான
பெரும்பான்மையோடு தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை மக்கள்
எப்போதும் நேசிப்பார்கள் என்பதை இப்போது திரிபுரா மக்கள் நிரூபித்துள்ளனர்.
மாணிக்
சர்க்கார் என்ற மகத்தான மனிதரின் நேர்மைக்கும் எளிமைக்கும் தூய்மைக்கும்
அனுபவத்திற்கும் திறமைக்கும் முன்பு அரைவேக்காடு ராகுல் காந்தியின் வெற்றுக்
கூச்சல் எடுபடவில்லை.
எந்த
மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்கு போனாலும் அங்கே காங்கிரஸ் கட்சியை படுகுழியில்
தள்ளும் வேலையை கன கச்சிதமாக செய்யும் ராகுல் காந்தி உண்மையிலேயே
பாராட்டுக்குரியவர்தான். காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று மகாத்மா
காந்தி சொன்னதை நடைமுறைப்படுத்தும் ஆற்றல் அவருக்கு மட்டும்தான் உண்டு.
துணைத் தலைவர்
ஆவதற்கு கொஞ்ச நாள் முன்பாக தாடியை எடுத்து விட்டு வலம் வந்த ராகுல் காந்தி
இப்போது திரிபுரா தோல்வியால் துயருற்று மீண்டும் தாடியோடு சோகப் பதுமையாக காட்சி
அளிப்பாரோ?
அப்போது
அவருக்கு இந்த பாட்டும் மிகப் பொருத்தமாக இருக்கும்.
எங்கே
செல்லும் இந்த பாதை? யாரோ யாரோ அறிவாரோ?
No comments:
Post a Comment