Saturday, February 2, 2013

விஸ்வரூபம் தீர்வு - யாருக்கு மிகப் பெரிய இழப்பு?

விஸ்வரூபம் பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து
விட்டது.

இதனால் யாருக்கு மிகப் பெரிய இழப்பு?

ஏழு காட்சிகளை வெட்டியதால் கமலஹாசனுக்கா?

இல்லை இஸ்லாமிய அமைப்புக்களுக்கா?

தான் நினைத்தது நடக்காமல் போனதால் ஜெ விற்கா?

குழம்பிய குட்டையை மேலும் குழப்ப நினைத்த கலைஞருக்கா?

இஸ்லாமியர்கள் மீது துவேஷத்தை உருவாக்க நினைத்த
பரிவாரப் படைக்கா?

இல்லை, இல்லை, இவர்கள் யாருக்குமே இல்லை.

கடந்த பத்து நாட்களாக விஸ்வரூபம் பிரச்சினையை
முன் வைத்து ப்ளாக்கில் எழுதி வந்த பதிவர்களுக்கும்
முகநூலில் ஸ்டேட்டஸ் போட்டு வந்தவர்களுக்கும்தான்.

அடுத்து இது போல சூடான பிரச்சினை எப்போது வருமோ?

பின் குறிப்பு : ஹி ஹி ; நான் கூட விஸ்வரூபம் பிரச்சினை
பற்றி மூன்று பதிவு எழுதினேன்.

வேறு மேட்டர் இல்லாததால் இதையே பதிவாக்கி விட்டேன்

2 comments:

  1. முகநூலை இது வரை நான் இந்த அளவு பயன் படுத்தியது இல்லை. இரு தினங்களுக்கு ஒரு முறை உபயோகித்த நான் இப்போது நாள் முழுதும் அதில் இருக்கிறேன். கடந்த 10 தினங்களாக செய்தி . தவிர வேறு எதுவும் பார்க்கவில்லை.

    ReplyDelete