Monday, February 18, 2013

நம்பிக்கையின் படுகொலை

 

2013. பிப்ரவரி 6. துனீசியாவின் இடதுசாரித் தலைவர், 48 வயதே நிரம்பிய சோக்ரி பெலெய்ட் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையைக் கண்டித்து தெருக்களில் கலகங்கள் பரவின. 1980களில் புகழ்பெற்ற மாணவர் தலைவராக விளங்கியவர் பெலெய்ட். சுரங்கங்களின் நகரமான கா·சாவில் கோபமுற்ற தொழிலாளர்கள் ஆளுங்கட்சியான மறுமலர்ச்சிக்கட்சியின் அலுவலகத்தை தாக்கினார்கள். பெலெய்ட் இத் தொழிலாளர்களின் அன்புத்தலைவராக விளங்கினார். சிடி பவுசிட் எனுமிடத்தில் எதிர்ப்பாளர்களை கலைக்க காவல்துறை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசித் தாக்கியது. 

இந்த இடத்தில்தான் 2010ல் “அரேபிய வசந்தம்” எனப்படும் எழுச்சிகர இயக்கங்கள் தோன்றின.2011 தேர்தல்களில் பெலெய்ட் தலைமை தாங்கிய “ஜனநாயக தேசபக்த இயக்கம்” குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை. எனினும் பெலெய்ட் பலரது நன்மதிப்பை பெற்ற மரியாதைக்குரிய தலைவராக விளங்கினார். எதேச்சதிகாரி பென் அலி 2011ல் ஆட்சி அதிகாரத்திலிருந்து துரத்தப்பட்ட பிறகு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் ஆட்சியையோ அல்லது பென் அலி விசுவாசிகளின் ஆட்சியையோ விரும்பாதவர்கள் பெலெய்டின் இடதுசாரி இயக்கத்தின் மீதுதான் நம்பிக்கை வைத்திருந்தனர். 2011 இயக்கத்தின் வீச்சை பெலெய்ட் முன்னெடுத்துச் செல்வார் என நம்பிக்கை பெற்றிருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கையின் மீது பேரிடி விழுந்துவிட்டது.


உழைக்கும் மக்களின் குரலை பிரதிபலித்த பெலெய்ட்பென் அலி அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் கடும் கோபத்தின் அடிப்படையில்தான் 2010-11 இயக்கம் வலிமை பெற்றது. சுரங்கத் தொழிலாளர்கள், தெரு சுத்தம் செய்பவர்கள், சாலை வணிகர்கள், சட்ட எழுத்தர்க ள் என சாதாரண மக்கள் துனீசியாவின் தெருக்களை முடிவில்லாமல் ஆக்கிரமித்து இருந்தனர். 2011 ஜனவரியில் பென் அலி துனீசியாவை விட்டு ஓடியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை இந்த உழைக்கும் மக்கள் சக்தியால் நிரப்ப முடியவில்லை. ஏனெனில் பென் அலி இடதுசாரி சக்திகளை நாட்டை விட்டு துரத்துவதில் வெற்றி பெற்றுவிட்டார். மீதமிருந்த தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். எந்த ஒரு இடதுசாரி அமைப்பையும் தலையெடுக்க பென் அலி அனுமதித்ததே இல்லை.பென் அலி இசுலாமியவாதிகளையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் இசுலாமியவாதிகளுக்கு இரண்டு சாதகமான சூழல்கள் இருந்தன. ஒன்று மசூதிகள். மசூதிகள் மூலமாக அவர்கள் தமது அமைப்புகளின் வலைதளத்தை பாதுகாத்துக்கொண்டனர். 

இரண்டாவதாக, வளைகுடா அரபுநாடுகளிடமிருந்து அபரிமிதமான நிதி வந்து குவிந்தது. இந்த இரண்டு சாதகமான அம்சங்களையும் பயன்படுத்தி இசுலாமியவாதிகள் பென் அலிக்குப் பிறகு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் வெற்றி கண்டனர். இதனால் சாதாரண உழைக்கும் மக்கள் மேலும் மேலும் பெலெய்ட் போன்ற தலைவர்கள் மீது நம்பிக்கை கொள்வது அதிகரித்தது. நவீன துனீசியாவை உருவாக்கிட சிதறிக்கிடக்கும் இடதுசாரிகள் ஒரே மேடையின் கீழ் அணிதிரள்வார்கள் என நம்பினர். பெலெய்டின் மரணம் அவர்கள்து நம்பிக்கையை தகர்த்துவிட்டது. அந்த கோபம்தான் அவர்களை இசுலாமியவாதிகளின் அலுவலகங்களை தாக்கும் அளவிற்கு ஆவேசத்தை ஏற்படுத்தியது.துனீசியாவின் ஜனாதிபதி இந்த படுகொலையை கண்டித்தார். அமைதி காக்கும்படி மக்களை வேண்டிக்கொண்டார். இத்தகைய அணுகுமுறை மூலம் பெலெய்டின் படுகொலையில் அரசாங்கத்தின் கொடூரப் பங்கு உள்ளது எனும் குற்றச்சாட்டிலிருந்து அரசாங்கத்தை காத்திட முயன்றார். எனினும் அவரது முயற்சி வெற்றிபெறப்போவது இல்லை. மக்கள் முன்னணி எனும் பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக பெலெய்டின் ஜனநாயக தேசபக்தி இயக்கம் இருந்தது. இந்த மக்கள் முன்னணியில்தான் பழைய துனீசியா தொழிலாளர் கட்சியும் ஒரு அங்கத்தினராக செயல்படுகிறது. தொழிலாளர் கட்சியின் தலைவரான ஹம்மா ஹமாமி “பெலெய்டின் படுகொலை கூலிப்படைக் கொலையாளிகளால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது” எனவும் இந்த படுகொலையில் அரசாங்கத்தின் கை உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 


புதிய ஆட்சியாளர்கள் வன்முறையை ஆதரித்தது ஏன்?“புரட்சிப் பாதுகாப்புக் குழு” எனத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஒரு கும்பல் துனீசியாவில் புதிய ஆட்சியின் கீழ் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இந்த வன்முறையையே தொழிலாளர் கட்சியின் ஹமாமி சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கும்பல் 2012 அக்டோபரில் லா·ப்டி நாக்ட் எனும் தலைவரைக் கொன்றது. இதே கும்பல்தான் துனீசியாவின் தொழிற்சங்க அலுவலகங்களை 2012 டிசம்பரில் தாக்கியது. மக்கள் ஒற்றுமையை வலியுறுத்திய சிதி அகமது போன்றோரின் நினைவிடங்களை சலா·பி எனும் இஸ்லாமிய பயங்கரவாதக் கும்பல் அழிக்க முயன்றது. இந்த வன்முறைகளை புதிய துனீசிய அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. எனவே வன்முறைக் கும்பல்கள் தைரியமும் ஊக்கமும் பெற்றன. இவர்களது முக்கிய இலக்கு இடதுசாரிகள்தான்!

பெலெய்டின் மரணம் கேள்விப்பட்ட பொழுது என் மனதில் 1993ல் தென் ஆப்பிரிக்க பொதுவுடைமை இயக்கத்தின் புகழ் பெற்ற தலைவர் கிரிஸ் ஹனியின் மரணம் பற்றிய எண்ணங்கள் மேலொங்கின. 50 வயதே நிரம்பிய கிரிஸ் ஹனி முற்போக்கு சக்திகளின் பிரதிநிதியாக விளங்கினார். இனவெறியில் இருந்து விடுபட்ட தென்னாப்பிரிக்காவை முற்போக்கு திசையில் கொண்டு செல்ல கிரிஸ் ஹனியின் பங்கு தேவைப்பட்ட நேரம். அவரது படுகொலை அந்த முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. 


பெலெய்ட்டின் படுகொலை ஏன்?பெலெய்ட்டின் படுகொலையும் அப்படிப்பட்ட சூழலில்தான் நிகழ்ந்துள்ளது. 2011 துனீசியா எழுச்சியில் பங்கேற்ற லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் குரலையும் கோரிக்கைகளையும் ஆட்சியில் உள்ள இஸ்லாமியவாதிகள் ஒடுக்க முயல்கின்றனர். கடந்த இரு மாதங்களாக துனீசியாவில் பரவலாக மக்களின் அதிருப்தி பரவி வந்தது. ஜனவரி 22-23ல் துனீசியா முழுவதும் நவீன தாராளமயக் கொள்கைகளை கண்டித்து ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த நிகழ்வுப்போக்குகள் ஆளும் இஸ்லாமியவாதிகளுக்கு மட்டுமல்லாது பழைய ஆட்சியாளர்களையும் பீதி அடையச்செய்தது. கிரிஸ் ஹனியைப்போல பெலெய்டையும் ஒழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

தமிழில்: அ.அன்வர் உசேன்

 நன்றி தீக்கதிர் 18.02.2013

4 comments:

  1. ஒரு குற்றவாளியை இந்தியா பாதுகாக்கிறது. இல்லாவிட்டால் சீனாவுடன் அவர்கள் உறவு வைத்துக்கொள்வார்கள் என்ற சொத்தை வாதத்தை முன்வைத்து தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு ஆதரவான, மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்துவருகிறது. ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்கூட இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதாகச் சொல்லிக்கொண்டே இலங்கையைக் காப்பதான ஒரு நிலையையே இந்தியா எடுத்தது.

    சிந்திப்பீர் தோழர்களே! எதிர்காலாம் நம்மைக் கேட்கும் என்பதற்காகவாவது சிந்திப்பீர்...

    ReplyDelete
  2. நாட்டின் அமைதிக்காகவும், சட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவும், ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு என்னும் இந்தியனின் வழக்கில் இருந்த ஓட்டைகளையும், சட்ட விதி மீறல்களையும், முரண்பாடுகளையும் கடந்த 2006-ம் ஆண்டே அவுட்லுக் பத்திரிகையில் பிரபல சமூக சேவகர் அருந்ததிராய் எழுதியிருந்த இந்தக் கட்டுரை மிகச் சரியாக அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின்பே மக்கள் பார்வையில் அதிகமாகப் பட்டிருக்கிறது. நானும் இப்போதுதான் அதைப் படித்து ஒரு இந்தியனாக இருந்து தொலைப்பதற்காக வெட்கப்பட்டேன்..! வேதனைப்படுகிறேன்..!

    வேதனைதான்....என்ன செய்ய....


    ReplyDelete
  3. Black History Month can be a painful reminder of the struggles many faced in their fight for freedom and civil rights. Many forgotten lives were sacrificed so others could live a better life.

    ReplyDelete
  4. உலகில் மரண தண்டனை இன்று மதில் மேல் பூனையாய் எப்பொழுதும் அல்லாடி (இந்த பக்கம் மா அந்த பக்கமா) கொண்டு இருக்கிறது ஆம் உலகில் 140 க்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை முற்றாக ஒழிந்துவிட்டனாவாம், இந்தியாவில் ,1455 பேர் இது வரை மரணித்திருக்கிறார்கள்

    ReplyDelete