Sunday, February 17, 2013

முகநூல்காரர்களின் சிந்தனைக்கு.. ஏன் இந்த இயந்திரத்தனம்?

வாழ்க்கையும் வாழ்த்துக்களும் இயந்திரத்தனமாய் மாறிக்
கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இங்கே.

தோழர் அசோகன் முத்துசாமி இடதுசாரி சிந்தனையாளர்,
எழுத்தாளர், பல நூல்களை எழுதியுள்ளார். தமிழாக்கம்
செய்துள்ளார். அமெரிக்கப் பேரரசின் ரகசியங்கள் 
ஒரு சிறந்த படைப்பு.

வலைப்பக்கத்திலும் முகநூலிலும் தீவிரமாக இயங்கி
வந்த அந்த தோழர் சில மாதங்கள் முன்பாக 
காலமாகி விட்டார்.

அவரது முகநூல் சுவரிலேயே  பலரும் அஞ்சலி 
செலுத்தியிருந்தனர். அவரது முகநூல் கணக்கு
De Activate ஆகவில்லை. அந்த நிலையில் இன்று
அவர் பிறந்த நாள். வழக்கம்போல் முகநூல்
அறிவிப்பு வந்தது.

அவரது பக்கத்திற்கு போனால் ஏராளமானவர்கள்
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா
என்று கூட தெரியாமல் இயந்திரத்தனமாக
வாழ்த்துக்கள்.

என்றாவது ஒரு நாள் அவரது பக்கம் சென்றிருந்தால்
ஒரு வேளை தெரிந்திருக்கும். யாருக்கு வேண்டுமானாலும்
ப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுப்பது, வந்தவற்றையெல்லாம்
ஏற்றுக் கொள்வது என்பதன் விளைவுதான் இது.

கொஞ்சம் இயந்திரத்தனத்தை விட்டு விலகி
வெளிவந்து உண்மையான நட்பை மட்டும்
வெளிப்படுத்துவோமே.


11 comments:

  1. காற்று வீசும் கங்குல் போதில்... மேற்கு வானில் பொழுது சாய்ந்த பின் பிறைநிலா வளர்வதும் முழுநிலா தேய்வதும் கண்டு மகிழ்ந்து கதைத்திருந்த நாட்கள்... கிணற்றுக் கட்டிலும் கோயிற் திண்ணையிலும் தேர்முட்டிப் படிகளிலும் நிலவொளியிலும் கும்மிருட்டிலும் கூடியிருந்த நாட்கள்... தொலைவில் பனி கொட்டும் பூமியில் குச்சறையில் தனியனாய் அன்றி இருந்தேன்.சப்பாத்தி குருமா

    ReplyDelete
  2. ராமன் அவர்களே! முக நூல் பற்றி சில அனுமானங்கள் எனக்கு உண்டு ! முக்கியமாக அது நவீன safty valve ! சமூக அவலங்களை பர்த்து கோபப்படும் நண்பர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வடிகாலாக மட்டுமே பயன்படும்! அதோடுசரி! எகிப்தில் நடந்தது புரட்சியா? அதனை புரட்சி என்று வர்ணித்து அது முகநூலால் நடத்தப்பட்டது என்றுபிரச்சாரம் செய்தார்களே! அந்த புரட்சி இன்று brotherhood கைகளில் சிக்கி சீரழிந்து வருகிறதே! முக நூலுக்கு சமூக தளங்களில் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை! அது வரையறைகுட்பட்டது ! புரட்சிக்கான பிரச்சாரத்திற்கு ஒருவேளை பயன்படலாம் ! முகநூல் மூலம்புரட்சி ஏற்படாது! அப்படி நம்புவது மூடநம்பிக்கை !---காஸ்யபன்!

    ReplyDelete
  3. ஃபேஸ்புக் வெறும் இய்நதிரத்தனமாக இருப்பதாகத் தோன்றுகிறது. உண்மையான அன்பைக் காட்டிலும், வெறும் சடங்குத்தனமான வாழ்த்துக்கள் நிரம்பி வழிவதால், நண்பர்கள் மீது உண்மையான அக்கறை கொள்வதில்லை போலிருக்கிறது. நல்ல பாடம்

    ReplyDelete
  4. சமூக நீதிப் போராளிக்கே இந்நிலையா என எண்ணி வருந்தினேன். ஆகப் பெரிய கைனவேதிகையாம் கடிகை மிகு பண்ணாட்டு முதலாளிகளின் விற்பனை சாம்பாகியான வாழ்த்தட்டைகள், முக நூல்கள் தரும் வாமக ஏகதிபத்தியத்தின் பின் விளைவுகள் இப்படியா ? மனிதர்கள் சிந்திக்காது தீழாகினராக செய்துவிடும். பொற்சோதியின் புகழ் மணி விளக்கில் வின் உயரவாழும் அத் தோழர் தம் முகனூல் கணக்கை முடிவுக்கு கொண்டுவர ஒரு கெளதம்பரா தோழர் கூட முயல்வில்லை என்பது கவலை தருகிறது. பூச்சு வெயில் தரையில விழ போராடிய அப் போராளியின் கணக்கை டிஆக்டிவேட் ஆக்க முயலோமா ?

    ReplyDelete
  5. திருவண்ணாமலைக்குப் போகனும்னு ரொம்ப நாளாவே ஒரு விருப்பம். பெங்களூர்ல இருக்கும் போதே நெறைய கன்னட நண்பர்கள் கூப்பிடுவாங்க. நாந்தான் போக முடியாம ஏதோ ஒரு காரணத்துக்காக ...போக முடியாமல் போய்விட்டது. உங்கள் ஊருக்கு பக்கம் தானே. நான் வந்தால் எனக்கு உதவி செய்ய இயலுமா ?

    ReplyDelete
  6. மிஸ்டர் அனானி 1 & அனானி 2 - நீங்க என்ன சொல்ல வரீங்க, உங்க கவிதை மாதிரி ஏதோ உன்னை கிறுக்க
    என் பக்கம்தான் கிடைச்சதா?

    அனானி 3 - உங்களைப் பற்றிய உண்மையான விபரத்தோடு அணுகுங்கள், உதவுகிறேன்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. தோழர் காஷ்யபன், நீங்கள் சொல்வது முழுவதும் சரி, ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, இந்த அவர்களே என்பதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்து விடுங்கள், வயது, சேவை, அனுபவம், உழைப்பு அனைத்திலும் நான் மிகவும் சிறியவன்.

    ReplyDelete
  10. முன்பே வெளியிட்டிருந்த பின்னூட்டம் இது, ஒரு வெட்டி பின்னூட்டத்தை நீக்கும் போது இதுவும் நீங்கி விட்டது.

    ReplyDelete