Friday, February 1, 2013

எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை





பாங்க் ஆப் அமெரிக்கா வெளியிட்டுள்ள ஒரு குறிப்பு இவ்வாறு சொல்கிறது.

“ சிங்கப்பூரில் முதலீட்டாளர்களை சந்தித்த இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்சூரன்ஸ்துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை உயர்த்துவதையும் பென்ஷன் மசோதாவையும் நிறைவேற்றுவதையும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தில் செய்து முடிப்பதாக உறுதியளித்துள்ளார்.

கூச்சல் ஒரு புறம் இருந்தாலும் எதிர்க்கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.”

இது இந்தியர் அனைவருக்குமான அபாய அறிவிப்பு. அவர்களின் சேமிப்பை பன்னாட்டுக் கம்பெனிகளின் பாக்கெட்டுக்களுக்கு மாற்ற நடக்கும் சதி.

மசோதா வரும்போதுதான் விலை போன கொள்கைக் குன்றுகள் யார் யார் என்று தெரியும்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – பழமொழி

திரைகடல் ஓடி அனைத்தையும் அழி – இது ப.சி மொழி.

வேட்டி கட்டிய இந்த தமிழன் பிரதமராக வேண்டுமாம்?

1 comment: