Thursday, January 3, 2013

இந்த அப்பாவி ரசிகர்களைப் பார்த்தால் சிரிப்பாகவும் இருக்கிறது, பாவமாகவும் தெரிகிறது.எரிச்சலும் வருகிறது


 
 (பழைய படம்)
ஒரு பதினைந்து நிமிடம் முகநூலில் இருந்தேன்.

யப்பா, கோபம் கொப்பளிக்க ஸ்டேட்டஸ்கள் 
கொட்டிக் கொண்டே இருக்கின்றன.

இந்தியா இன்று நடைபெற்ற போட்டியில் 
மோசமாக  தோற்றுப் போய்விட்டதனால் 
உருவான ஆத்திரம் அது.

இந்திய அணியை தடை செய்,
ஒட்டு மொத்த அணியை கூண்டோடு தூக்கு,
இவனைத் தூக்கு, அவனைத் தூக்கு,
கும்கி தம்பி ராமையா டயலாக் போல
இந்த அசிங்கம் பழக்கப்பட்டுவிடும் என்று,

என வெரைட்டி வெரைட்டியாக திட்டிக் கொண்டே
இருக்கிறார்கள்.

இதே ரசிகப் பெருமக்கள்தான் ஒரு மேட்சில்
வெற்றி பெற்றால் ஆ,ஊ என்று ஆரவாரம்
செய்வார்கள்.

இன்று திட்டுபவர்கள் நாளையே ஒரு வெற்றி
கிடைத்தால் அப்படியே பல்டி அடித்து விடுவார்கள்.

பாவம் இவர்களுக்கு இன்னும் ஒரு விஷயம்
புரியவில்லை.

நாட்டுக்காக விளையாடிய காலமெல்லாம்
மலையேறி விட்டது. காசுக்காக மட்டுமே 
விளையாடும் ஆட்டம் இது. கூட்டம் இது.
விளம்பர வாய்ப்புக்கான கூட்டம் இது.

எனவே தவறு அணியின் மீதோ,
வாரியத்தின் மீதோ கிடையாது. 

அவர்கள் காசு பார்க்கும் வித்தை தெரிந்தவர்கள்.

பாவம் ரசிகர்கள்தான் பணத்தையும் நேரத்தையும்
ஒரு சேர இழந்து கொண்டிருக்கிறார்கள்.

விளையாட்டு வீரர்களை கடவுளின் அவதாரமாக
பார்ப்பதால்தான் இந்த தோல்விகள் எல்லாம்
பலத்த அடியாக உள்ளது. 

அதனால்தான் கொந்தளிக்கும் ரசிகர்களைப் பார்த்தால்
சிரிப்பாகவும் வருகிறது, பாவமாகவும் இருக்கிறது.
 

1 comment: