Sunday, January 13, 2013

நடிகர் விஜய்யை அசிங்கப்படுத்தும் ஒரு விளம்பரம்

 

இன்று வேலூர் லோக்கல் சேனல் ஒன்றில் இந்த விளம்பரம்
பார்த்தேன்.

ஒரு பெண் நடிகர் விஜய்க்கு தொலைபேசி செய்து தன்
காதலை தெரிவிக்கிறார். விஜய்  எல்லோரையும் என்னால்
காதலிக்க முடியாது என்று மறுத்து விடுகிறார்.

அந்தப் பெண் ஒரு மொபைல் கடைக்குப் போய் புதிய
போன் வாங்கி மீண்டும் விஜயோடு பேசுகிறார். யார்
என்று  விஜய் கேட்டதும்  தன் பெயரைச் சொல்லி
நேற்று கூட என் காதலை தெரிவித்தேனே என்கிறார்.

உடனே விஜய் சிலிர்த்துப் போய், நேற்று உன் குரல்
சுமாராக இருந்தது, இன்று சூப்பராக இருக்கிறதே 
என்று கேட்டதும் நான் இந்தக்கடைக்கு சென்று
புதிய போன் வாங்கிப் பேசுகிறேன் என்றதும்

விஜய் அந்தக் கடையை காதலிப்பதாக சொல்கிறார்.
அந்தக் கடையை மட்டும்தானா என அந்தப் பெண்
கேட்டதும் அந்தப் பெண்ணையும் காதலிப்பதாக
சொல்கிறார்.

நடிகர் விஜய் குரலை நன்றாக மிமிக்ரி செய்துள்ளனர்
என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

நடிகர் விஜய், பெண்கள், காதல் என 
எல்லாவற்றையும் கொச்சைப்படுத்தியுள்ள
வக்கிரமான, மிக மிக அபத்தமான  விளம்பரம் இது.

இப்படி ஒரு விளம்பரம் வருவது விஜய்க்கு தெரியுமா? 

No comments:

Post a Comment