திமுக வின்
அடுத்த தலைவராக நான் மு.க.ஸ்டாலினை வாய்ப்பு கிடைத்தால் முன்மொழிவேன் என்று கலைஞர்
சொல்லி விட்டார். இது பற்றி விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பொதுவானவர்கள் யாருக்கும்
இது சற்றும் தொடர்பில்லாதது.
அடுத்த தலைவர்
யார் என்பது அந்தக் கட்சியின் முழுமையான உள் விவகாரம். யார் வர வேண்டும் என்று
முட்டி மோதிக் கொள்வதோ, ஜனநாயக முறைப்படி தேர்வோ அல்லது நியமனமோ, அது நிச்சயமாக
அந்த கட்சியின் உறுப்பினர்கள், தொண்டர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். இது திமுக
விற்கு மட்டுமல்ல எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். எல்லா பதவிகளுக்கும்
பொருந்தும்.
அமைச்சர்,
மேயர், முதல்வர் போன்ற ஜனநாயகப்பணி என்று வரும் போது இவர் அப்பதவிக்கு
பொருத்தமானவரா என விவாதிப்பது சரியாக இருக்கும்.
திமுக
விவகாரத்தில் கலைஞர் ஒன்றே ஒன்றை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
முன்பு ஒரு முறை குடும்பத் தகறாரில் மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று
அப்பாவிகள் பலியானது போல ஒரு மோசமான நிகழ்வு எதுவும் நடைபெறாமல் எச்சரிக்கையாய்
இருந்தால் போதுமானது.
No comments:
Post a Comment