காலம்
தாழ்த்தித் தரப்பட்ட விருது. ஆகவே எனக்கு இது தேவையில்லை என்று பின்னணிப் பாடகி
எஸ்.ஜானகி தனக்கு அளிக்கப்படவுள்ள பத்ம விபூஷன் விருதை ஏற்க மறுத்தது நியாயமான
கோபம். அந்த உணர்வுகளை நிச்சயம் ஏற்க வேண்டும். பல விருதுகள் அதுவும் அரசு
வழங்கும் விருதுகள் சரியான நபருக்கு சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை. பல சமயம்
தவறான நபர்களுக்கும் செல்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு
பத்ம பூஷன் வழங்கப்பட்ட அதே வருடம்தான் இளையராஜாவிற்கும் பத்ம பூஷன்
வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையுலகிற்கு வரும் முன்னரே இசையின் சிகரங்களைத்
தொட்டவர் ராஜா. விருது வழங்குவதில் உள்ள முரண்பாடுகளுக்கு இது ஒரு உதாரணம்.
தொழிலாளர்
நலன் காக்க போராடும் தொழிற்சங்கத் தலைவர்கள் யாரும் பத்ம விருதுகள் பெற்றதாய்
எனக்கு நினைவில்லை. அப்படியே கிடைத்திருந்தாலும் அவர்கள் சமரச அமைப்பான
ஐ.என்.டி.யு.சி யைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் விருதுப்
பட்டியலில் முதலாளிகளுக்கு தவறாமல் இடம் உண்டு.
காலம்தாழ்த்தி
எனக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக கோபப்படும் எஸ்.ஜானகி அவர்கள் தனக்கு பாரத ரத்னா
விருது வழங்கப்பட வேண்டும் என்று கேட்பதுதான் நெருடலாக உள்ளது. ஆயிரக்கணக்கான
பாடல்களை பல மொழிகளில் பாடிய எனக்கு ஏன்
அந்த விருது அளிக்கக் கூடாது என்பது அவர் கேள்வி. அவரைப் பொறுத்தவரை அது
நியாயமாகக் கூட இருக்கலாம். சிங்கார வேலனே தேவாவும் அவர் பாடியுள்ளார். நேத்து
ராத்திரி யம்மாவும் பாடியுள்ளார். திரைப்பட பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கருக்கு
அளித்துள்ளதால் அவரும் எதிர்பார்க்கிறார் என தோன்றுகிறது.
ஆனால் எனக்கு
இந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று கேட்பது அவருக்கும் அழகல்ல, விருதுக்கும்
அழகல்ல. அவரது நியாயமான கோபத்தையே அது கறைப்படுத்தி விட்டது.
Did she claim that she needs to be awarded Ratna ? I have not read it or heard that ? Is that the twisted one from the media ?
ReplyDeleteI cant believe this....is it true?
ReplyDelete