முக நூலில் இருந்து எடுத்தது.
விருது கிடைக்காத வயிற்றெச்சலில் ஜெயமோகன்
புலம்பியுள்ளதாகவே நான் உணர்கிறேன்.
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நலந்தானே?
சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டவுடன் (நான் எதிர்பார்த்தது வேறாக
இருந்தாலும்) முதலில் உங்கள் தளத்தில்தான் தேடினேன்…செல்வராஜ் யாரென்று
அறியலாம் என்று. யார் எந்த விருது பெற்றாலும் முதல் வாழ்த்து சொல்லும்
நீங்கள் இந்த முறை மௌனம் சாதித்து விட்டீர்கள். யார் அவர்?
அன்புடன்
பிரபல எழுத்தாளர் ஜெயமோகனிடம் அவரை பெரிதும் மதிக்கும் இளம்பரிதி என்பவர்
டி.செல்வராஜ்க்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருப்பது பற்றி கேட்ட
கேள்விக்கு தமது பிளாக்கில் '' மிகவும் நாகரீகமான'' முறையில் ஜெயமோகன்
எழுதியுள்ள பதிலை படித்துதான் பாருங்கள்...............................
அன்புள்ள இளம்பரிதி அவர்களுக்கு
டி செல்வராஜ் மூத்த முற்போக்கு எழுத்தாளர். இருபதாண்டுகளுக்கு முன் நான்
வாசித்தவற்றில் அவரது மலரும் சருகும், தேநீர் போன்றவை அந்தவகை
எழுத்துக்களுக்குள் நல்லவை என்ற எண்ணம் இருந்தது
இப்போது
வாசிக்கையில் பாவமாக இருக்கிறது. பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்
கதைச்சுருக்கம் சொல்ல அதைக்கேட்டுப் பிள்ளைகள் எழுதிய கதைகள் போல. ஒரே
மாதிரி சொற்றொடர்கள். ஒரே மாதிரி கதைப்போக்கு.
அவரது விருதுபெற்ற
தோல் என்னும் நாவலை அவர் ஐம்பதுகளில் எழுதினார் என்ற எண்ணமே வந்தது.
இலக்கியம் என்பதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
இச்சூழலில் நான்
என்ன சொல்வது? தமிழிலக்கியத்தின் தலைவிதி. இந்த விருதுடன் அவர் எங்காவது
ஓய்ந்தால்கூடத் தமிழுக்கு நல்லதுதான். இல்லாவிட்டால் விருதுக்காக மூன்று
வருடங்களுக்கு ஒரு படைப்பு எனப் பிதுக்கி வெளியே தள்ளிக்கொண்டே இருப்பார்.
வயதும் ஆகிறது.
தமிழில் பொதுவாக விழுமியங்கள் அளவுகோல்கள்
முக்கியமே இல்லை. நம்மவரா இல்லையா என்பதே எங்கும் செல்லுபடியாகிறது. எந்த
ஒரு விஷயத்துக்கும் ஒரு பொது அளவுகோலை நாம் கையாள்வதில்லை. நமக்குத்
தெரிந்த ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்கிறோம்.
சாகித்ய அக்காதமியில் விருதுபெற்றவர்கள் மேலும் விருதுகளைத் தீர்மானிப்பதில் முக்கியமான செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
சாகித்ய அக்காதமி ஆரம்பிக்கப்பட்டபோது ராஜாஜி அதில் செல்வாக்கை
செலுத்தினார். அவருக்குப் பிரியமான பேராசிரியர்கள் உள்ளே சென்றார்கள்.
தங்களுக்கும் தங்களுக்கு உகந்தவர்களுக்கும் விருதுகளை
அளித்துக்கொண்டார்கள். ஆரம்பத்தில் சாகித்ய அக்காதமி விருது பெரும்பாலும்
பேராசிரியர்களுக்கே கிடைத்தது
பின்னர் பேராசிரியர்கள்
அவர்களுக்குப்பிடித்த வணிக எழுத்தாளர்களை விருதுபெறச் செய்தார்கள்.
அகிலனும் நா.பார்த்தசாரதியும் அவ்வாறு விருது பெற்றார்கள். நா.பார்த்தசாரதி
உண்மையான இலக்கிய ஆர்வம் கொண்டவர். சிறந்த இலக்கியவாதிகளை விருதுக்குள்
கொண்டுவர உண்மையாகவே முயன்றார்.
அவ்வாறு அவர் விருதுபெற்றுத்
தந்தவர்களில் தவறான தேர்வு என்பது வல்லிக்கண்ணன்தான். வல்லிக்கண்ணனின்
வறுமையே நா.பார்த்தசாரதியை அம்முடிவை எடுக்கச்செய்தது என அவரே சொல்லிக்
கேட்டிருக்கிறேன்.
ஆனால் வல்லிக்கண்ணன் சக இலக்கியவாதிகளுக்கு
விருது வழங்கப்படக்கூடாதென்பதில் மிகத்தீவிரமாக இருந்தார். முற்போக்கு
ஆசாமிகளை உள்ளே கொண்டுவருவதே அவரது குறி. அதற்காக அவர் வணிக
எழுத்தாளர்களுடன் ஒத்துழைத்து அவர்கள் விருதுபெற வழிவகுத்தார். அவர்கள்
இவருக்கு அவ்வப்போது விட்டுக்கொடுத்தார்கள்
விளைவாக அக்காதமியில்
கொஞ்சம் கொஞ்சமாக முற்போக்கு கும்பல் உள்ளே புகுந்து இடம் பிடித்தது.
விருதுகளை அவர்களுக்கே அளித்துக்கொள்ள ஒரு மாஃபியா மாதிரி
செயல்படுகிறார்கள்
சரிதான், புரட்சி நடத்தி மத்திய அரசைக் கைப்பற்ற முடியவில்லை. சாகித்ய அக்காதமியையாவது கைப்பற்றினோம் என்ற நிறைவு மிஞ்சட்டும்
ஜெ
நான் வெளியிட்ட பின்னூட்டம் கீழே உள்ளது
விடுங்க பாஸ் ! சினிமாவில் எழுதுவோர், பின் நவீனத்துவ வாதிகள் தாமே சிறந்த இலக்கியவாதி போலக் கூறிக் கொள்வார்கள். உழைக்கும் மக்களின் யதார்த்த இலக்கியத்தின் ஆழத்தை அடக்கியாள நினைக்கும் வர்க்கத்தாரால் தாங்க முடிவதில்லை. அவருக்கு ஜெலுசில் மருந்தை வாங்கி அனுப்பி விடுங்கள் .
ReplyDelete