Friday, January 11, 2013

ஆனந்த விகடன் இதையும் சொல்லியிருக்க வேண்டும்.



வெறியன் ஒருவனின் வன்மத்தால் திராவக வீச்சால்
உயிருக்கு போராடி வரும் காரைக்கால் வினோதினி
பற்றி இந்த வாரம் ஆனந்த விகடன் எழுதியுள்ளது.

ஆயிரமாயிரம் கனவுகளோடு படித்து முடித்து விட்டு
வேலையில் சேர்ந்த நேரத்தில் காதலிக்க மறுத்த
காரணத்தினால் அந்த பெண் மீது ஒரு அயோக்கியன்
ஒரு பாட்டில் திராவகத்தை வீசி விட்டான்.

அந்தப்பெண் குணமாக இன்னும் எத்தனை நாள்
பிடிக்கும் என்று தெரியாது. 

அந்தப் பெண்ணின் மருத்துவச்செலவுக்காக
நல்ல இதயம் கொண்ட பலரும் உதவி வருவதையும்
ஆனந்த விகடன் எழுதியிருந்தது.

அந்தப் பெண்ணிற்கு நியாயம் கிடைப்பதற்காக
போராடி வரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர்
சங்கம், நிதியும் திரட்டி வருகின்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின்
மாநில மாநாட்டின் போது மாதர் சங்க மாநிலப்
பொதுச்செயலாளர் தோழர் பி.சுகந்தி இந்த
கொடூர சம்பவத்தை விவரித்து வேண்டுகோள்
விடுத்த போது சில நிமிடங்களிலிலேயே 
மாநாட்டுப் பிரதிநிதிகள் அளித்த நிதி
ரூபாய் 50,000.00

எங்கள் சங்கத்திலும் மாவட்ட அளவிலான
இரு நிகழ்ச்சிகளில் ரூபாய் 12,500 திரட்டித்
தந்தோம்.

மாதர்சங்கம் சென்று சந்தித்த பின்பு புதுவை
அரசு ரூபாய் 1,50,000.00 அளித்தது. 

அந்தப் பெண்ணிற்காக அனைத்திந்திய ஜனநாயக
மாதர் சங்கம் செய்து வரும் முயற்சிகள் பற்றியும்
ஒரு வரியாவது ஆனந்த விகடன் எழுதியிருக்க
வேண்டும். 

இது வேண்டுமென்றே செய்யப்பட்ட 
இருட்டடிப்பாக இருக்காது என்று 
நம்புகிறேன்.
 

 

1 comment:

  1. என்ன கொடுமை இது?
    அட பாவமே!
    பரிதாபகரமாக இருக்கிறது நண்பரே.

    பெண் ஒருவர் தன்னை காதலிக்கவில்லை ஒதுங்கிவிட வேண்டியதுதானே கண்ணியம்!

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete