நேற்றுதான்
டாஸ்மாக் விற்பனை, மதுவினால் ஏற்படும் பாலியல் கொடுமைகள், மது விலக்கு கொண்டுவர
வேண்டிய அவசியம் இவை பற்றியெல்லாம் எழுதினேன்.
இன்று காலை
மின்னஞ்சலைப் பார்த்தால் ஒரு புத்தாண்டு வாழ்த்து சற்று தாமதமாக வந்திருந்தது.
ஒரு பெரிய
நிறுவனம், பல தொழில்களை செய்து வருகின்ற ஒரு நிறுவனம் அந்த வாழ்த்துச் செய்தியை
அனுப்பியிருந்தது. அதனை கீழே இணைத்துள்ளேன். (நிறுவனத்தின் பெயரை எடுத்து
விட்டேன்).
பார்த்தீர்களா,
மது பானம் பொங்கி வழிவதைப் போல உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் பொங்கி வழிய
வேண்டுமாம். அரசு இலக்கு நிர்ணயித்து குடிக்கச் சொன்னால், இவர்கள் வாழ்த்து அட்டை
அனுப்பி குடிக்கத் தூண்டுகிறார்கள்.
வேறு எத்தனையோ
விதமான படங்களில் வாழ்த்து அனுப்பி இருக்கலாம். ஆனால் பாட்டில்களையும்
கோப்பைகளையும் மது பானத்தையும் போடுவது இவர்களின் பொறுப்பற்ற அணுகுமுறையைக்
காண்பிக்கிறது என்று சொல்ல முடியாது. வேண்டுமென்றே செய்கிற திமிரைத்தான்
வெளிப்படுத்துகிறது.
அரசு ஒரு
மாதிரி குடிப்பழக்கத்தை ஊக்குவித்தால், இவர்கள் வேறு மாதிரி ஊக்குவிக்கிறார்கள்.
மக்கள் கையில் உள்ள காசை எப்படியாவது பிடுங்கிட வேண்டும். அவ்வளவுதான். வேறு எந்த
நோக்கமும் கிடையாது.
அந்தப்
பழக்கம் இல்லாததால் “ இது என்ன கொடுமை சார்? “ என்று நான்கு பேரிடம் புலம்பி விட்டு பதிவு எழுத வந்து
விட்டேன். பழக்கம் உள்ளவர்களின் கண்கள் இதைப் பார்த்ததும் கால்கள் டாஸ்மாக் நோக்கி
போயிருக்குமே!
இந்த
லட்சணத்தில் இந்திய தனியார் நிறுவனங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்க னு
மத்தியரசு சொல்கிறது. ஆமாம் அப்படித்தான் என்று அப்பப்ப அப்துல் கலாம் வேற
சொல்வாரு......
பின் குறிப்பு
: ரொம்பவும் எதிர்பார்த்து வந்தீங்களா ? நீங்களும் ரொம்ப நல்லவர்தான்.
No comments:
Post a Comment