Monday, January 21, 2013

ராகுல் காந்தி பம்மாத்தின் பின்னே பதுங்கியுள்ள ஒரு பயங்கரம்





ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரானது பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை. முன்னரே ஒரு பதிவில் சொன்னது போல அது அக்கட்சியின் உள் விவகாரம். நேரு குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் தங்களை அடக்கியாள் அதிகாரம் இல்லை என்று காங்கிரஸ்காரர்கள் நினைத்தால் அதிலே நமக்கென்ன பிரச்சினை?

ஆனால் ஜெய்ப்பூர் பிரகடனம் என்ற பெயரில் ஒரு பம்மாத்து நாடகம் நடந்துள்ளது. அதிலே ஒரு வரி பத்து லட்சம் வேலைவாய்ப்புக்கள் ஆண்டுக்கு ஆண்டு உருவாக்குவோம் என்பது. அதைப்பார்த்து யாரும் புல்லரித்துப் போகாதீர்கள். மன்மோகனை விட ராகுல் காந்தி சூப்பர் என்று யாரும் முட்டாள்தனமாக சந்தோஷப்பட வேண்டாம்.

முதலீட்டார்கள் நலனுக்கு ஏற்ப, அவர்களுக்கு உகந்த ஒரு சிறப்பான சூழலை உருவாக்கி இவர்களை வேலைவாய்ப்புக்களை உருவாக்குவார்களாம்.

என்ன புடலங்காய் சிறப்பான சூழல்?

இந்தியாவின் எந்த தொழிலாளர் நலச்சட்டங்களோ, வருமான வரிச் சட்டங்களோ, மற்ற எந்த ஒரு விதிகளோ பொருந்தாது என்பதுதான் பொருள்.

பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் இன்னும் அதிகமான சலுகைகளை வழங்கப் போகிறோம் என்பதுதான் இதன் பொருள். முதலாளிகள் விரும்பியது கண்டிப்பாய் நடக்கும்.

பத்து லட்சம் வேலைகள்?

முன்பு என்னவோ, அதுவேதான் இப்போதும்.

முன்பு என்ன?

எதுவும் நடக்கவில்லை.

அப்படியென்றால்

இப்போதும் எதுவும் நடக்காது.


3 comments:

  1. //பத்து லட்சம் வேலைவாய்ப்புக்கள் ஆண்டுக்கு ஆண்டு உருவாக்குவோம் //

    சரியாதானே சொல்லுறாங்க... பத்து லட்சம் முதலாளிகளை தொழிலாளியாகி வேலை கொடுப்பார்கள் ...

    ReplyDelete
  2. யாராவது காங்கிரசுக்கு பால் ஊத்துங்க

    ReplyDelete
  3. எல்லாருக்கும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் FDI ரீடெயில் மார்கெட்டுகளில் கஸ்டமர் அட்டெண்டர் வேலை கொடுப்பாங்க.

    ReplyDelete