இன்று பாலிமர் டி.வி யில் ரஜனிகாந்த நடித்த
அடுத்த வாரிசு ஒளிபரப்பினார்கள்.
சில நிமிடங்கள் மட்டுமே பார்த்தேன் என்றாலும்
கூட
அது சில பழைய நினைவுகளை தூண்டி விட்டது.
கல்லூரிக் காலத்தில் அந்த திரைப்படம் வெளியான
போது முண்டியடித்துக் கொண்டு முதல் நாளே
பார்த்த படம்.
மிகுந்த எதிர்பார்ப்போடு போய் ஏமாற்றம்
அடைந்த படம்.
கல்லூரிக் காலத்தில் ரஜனிகாந்த் ரசிகனாக
இருந்த நான், கொஞ்சம் கொஞ்சமாக அந்த
நிலையிலிருந்து மாற இப்படம்தான்
துவக்கப் புள்ளியாக இருந்தது என்று
நினைவு.
சின்னக்குழந்தை கூட அடுத்த காட்சி என்ன
என்று சொல்லி விடக்கூடிய கதை.
அதிலே மிகப் பெரிய காமெடி என்னவென்றால்
கத்திச்சண்டை ஆனந்தன் ரஜனிகாந்த் போல
முகமுடி போட்டிருப்பார். ஒரிஜினல் ரஜனி
அந்த முகமுடியை கிழித்தவுடன்
திடீரென்று பெரிய தொப்பை வந்து விடும்.
ஆனால் சில நல்ல அம்சங்கள் உண்டு.
இளையராஜாவின் இசை, பின்னணியும் சரி,
பாடல்களும் சரி என்றும் அற்புதம். இன்றும்
இனிமை.
ஆசை நூறு வகை பாடல் கேட்கும் போது
மலேசியா வாசுதேவன் இறந்தும் வாழ்கின்றார்
என்று தோன்றியது.
ராஜஸ்தான் அரண்மனைகளை பாபுவின் கேமரா
நன்றாக காண்பித்திருக்கும்.
மதுரை திரைப்பட ரசிகர்கள் திரைப்படத்தின் போது
எழுப்பும் கமெண்டுகள் உலகபுகழ் பெற்றது.
இந்தப்படத்தின் போது எழுந்த ஒரு கமெண்ட்.
சிலுக்கு சுமிதா முதல் காட்சியில் வரும் போது
முழுமையாக உடை அணிந்திருப்பார்.
அப்போது எழுந்த ஒரு குரல்
" இப்படி ட்ரஸ் போடறதுக்கு எதுக்குய்யா
சிலுக்கை நடிக்க வைக்கிறீங்க"
இந்த இடத்தில் சிலுக்கைபற்றி எப்போதோ படித்த செய்தி ஒன்று நினைவுக்கு வருவது தவிர்க்க இயலவில்லை.அவர் நடிக்க வந்த புதிதில் நடனம் ஆடிவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தாராம். அப்பொழுது அவரது தொடையை மறைக்க யூனிட்க்காரரிடம் ஒரு சின்ன கர்ச்சிப்பாவது கேட்டாரம்.ஆனால் அவருக்கு அது அந்த நேரம் மறுக்கப்பட்டிருக்கிறது.பின்னாட்களில் அது அவருக்கு தேவைப்படவில்லை என்பதை உருக்கமாக சொல்லிச்சென்றது அந்த செய்தி.
ReplyDeleteFULL RAJINI MOVIE IS ADUTHA VAARISU. IT WAS RUNNING AT APSARA THEATRE. I WAS STUDYING MY HSC. WHAT A MOVIE!(FOR RAJINI FANS)SILK SUMITHA....MMMMMMMMM
ReplyDelete