Saturday, January 19, 2013

தண்டோராவிற்கு பயந்து அடி பணிந்த விப்ரோ



இன்றைய ஹிந்து நாளிதழில் படித்த செய்தி.

1800 கோடி ரூபாய் ஓராண்டில் லாபம் சம்பாதித்த
விப்ரோ நிறுவனம், பெங்களூர் மாநகராட்சிக்கு
செலுத்த வேண்டிய சொத்து வரி 18 கோடியை
கட்டாமல் ஏமாற்றி வந்தது.

விப்ரோவின் ஏய்ப்பு வேலையை  அக்கம்பெனி
முன்றாக நின்று தண்டோரா போட்டு அறிவித்த
பின்பு  அவசரம் அவசரமாக ஐந்து கோடி ரூபாய்
கட்டியுள்ளது. 

இன்னும் 13 கோடி ரூபாய் பாக்கியுள்ளது.

பெரு முதலாளிகளிடமிருந்து பணம் வசூலிக்க
வேறு வழி எதுவும் இல்லையா என்ன?

இன்னும் எத்தனை கம்பெனிகள் முன்பாக
தண்டோரா போடப் போகின்றார்கள்.

மானம் போனாலும் பரவாயில்லை, காசு
போகக் கூடாது என்று கருதும் எத்தனையோ
பெரிய மனிதர்களை இந்த தண்டோரா சத்தம்
எதுவும் செய்து விடாது.

வரிகளை கட்டாத நிறுவனங்களை சீல் வைத்து
மூடுவது, அசையும் சொத்துக்களை பறிமுதல்
செய்வது போன்ற வழிமுறைகளை 
பயன்படுத்துவதுதான் சரியாக இருக்கும்.

 

2 comments:

  1. தண்டோராக்கள் செய்யிகிற வேலைகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete