Friday, January 18, 2013

ரத்தப்பசி உறுமல்களை நிறுத்துக!





இந்தக் கொடூரமான செயலுக் குப் பிறகு பாகிஸ்தானுடனான உறவுகள் வழக்கம் போல் இருக்க முடியாது.” -இப் படி கடந்த செவ்வாயன்று பிரதமர் மன் மோகன் சிங் கூறியிருக்கிறார். அவரது சோர்வு தட்டும் சொற்களும் - பாகிஸ்தா னைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இந்தியா வுக்கு விசா இல்லாமல் பயணம் மேற் கொள்ள அனுமதிக்கும் முடிவைத் தள்ளி வைப்பது என்ற அவரது அரசின் மோச மான முடிவும் - பாகிஸ்தான் தொடர்பான அவரது கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகத் தொடுக்கப்பட்டு வந்த தாக்குதல்கள் வினையாற்றத் தொடங்கி விட்டதைக் காட்டுகின்றன. இது ஒன்றும் நற்செய்தியல்ல. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டது வன்மையான கண்ட னத்துக்குரிய இழிசெயல் என்பது முழுக்க முழுக்க உண்மையே. ஆனால் இத்த கைய செயல்களில் ஏதோ பாகிஸ்தான் மட்டுமே ஏகபோகமாக ஈடுபட்டுவருவ தாகச் சொல்லிவிட முடியாது என்பதை யும் நேர்மையாக ஒப்புக்கொண்டாக வேண் டும். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் சில கட்டுமானங்களை மேற் கொண்டிருப்பதற்கு இந்தியா தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பது பற்றி கடந்த மார்ச் மாதத்தில்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் .கே. அந்தோணி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்

ஆனால், இதே வேலையை இந்தியாவும் செய்து கொண்டுதான் இருக்கிறது என்று, வேறு யாருமல்ல, இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிக்ரம் சிங்கே, ‘தி ஹிண்டுநாளேட்டிற்கு அளித்த பேட்டியில் உறுதிப் படுத்தியிருக்கிறார். முதல் கல்லை எறிந் தது யார் என்று கேட்டுக்கொண்டிருப் பதில் அர்த்தமில்லை. இப்போது தேவைப் படுவது என்னவென்றால், எல்லைக் கட்டுப் பாட்டுப் பகுதியில் நிதானத்தை வலுப் படுத்துவதுதான். கடந்த சில நாட்களாக, போர் வெறி பிடித்தவர்களின் வெறுக்கத் தக்க உறுமல்களுக்கு நிகராக, நெறியற்ற முறையில் சில காட்சிகள் வெளியாகியுள் ளன; அவற்றில் பெரும்பாலானவை, உட னடியாகப் பாயக்கூடிய தோட்டாவி லிருந்து பாதுகாப்பான தொலைவில் இருக்கிற தொலைக்காட்சி நிலையங்களி லிருந்து கிளம்பியவைதான்; இதை இங்கே குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது. ராணுவத் தலைமைத் தளபதியின் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய நிதானமும், ஒவ் வொரு இந்திய வீரரின் தலைக்கும் பத்து பாகிஸ்தானிய வீரர்களின் தலைகள் துண்டிக்கப்பட வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வரா ஜின் அருவருக்கத்தக்க அறைகூவலுக் கும் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட் டாமல் இருப்பது கடினம்.
போர்களைக் கவனித்துவந்திருக்கிற எவரும் வீரர்கள் ரத்தம் சிந்தியாக வேண்டும் என எளி தாகக் கூற மாட்டார்கள்; போரின் விளைவு கள் எப்படி இருக்கும் என்பதைத் தங்க ளால் முன்கூட்டியே கணித்துவிட முடியும் என்று அவர்கள் நம்பவும் மாட்டார்கள்.நான்கு அம்சங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்டாக வேண்டும்.  

முதல் அம்சம், 2007 நவம்பரில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக ஜெனரல் பர் வேஸ் அஷ்ஃபாக் கயானி பதவியேற்ற நாளிலிருந்தே, அவரது திரைமறைவு வேலை களும் ஆயுதப் படைகளும் கவனமாகத் திட்டமிட்ட முறையில் பகைமையை வளர்ப் பதில் ஈடுபட்டு வந்துள்ளன. 2003ல் தொடங் கப்பட்ட இணக்கச் சூழலைச் சீர்குலைப் பதே அதன் நோக்கம். அதே வேளையில், உலக அளவில் கண்டனம் எழுவதைத் தவிர்க்கும் வகையிலும் அந்த வேலைகள் நடந்துவந்துள்ளன. இரண்டாவதாக, இந்தப் பிரச்சனைக்கு இந்தியா ராணுவத் தின் மூலமாகத் தீர்வு காண்பதற்கு உள்ள வாய்ப்புகள் மிகக் குறைவேயாகும். போர் மூளுமானால் அதற்குத் தர வேண்டிய விலைகளும், அணுகுண்டு மோதலாக மாறக்கூடிய அபாய நிலைகளும் இப் போது இந்தியா எதிர்கொண்டிருக்கிற சாதாரணமான மோதல்களை விடவும் பல மடங்கு கடுமையாக இருக்கும். இந்தியா விடம் ரகசிய வழிமுறைகளும் உண்டு, வழக்கமான வழிமுறைகளும் உண்டு. இரண்டையும் இந்தியா செயல்படுத்திய தும் உண்டு. இப்போதும் பெரும் செயல் திறனுடன் அவற்றைச் செயல்படுத்த முடியும்தான். ஆயினும், ஒரு நெருக் கடியை ஏற்படுத்துவது என்பது இந்தியா வின் தலைமைத் தளபதிகளை விடவும் பாகிஸ்தானின் தலைமைத் தளபதிகளது நோக்கங்களுக்கே சாதகமாக அமையும்


மூன்றாவதாக, பாகிஸ்தானின் மூத்த குடிமக்களுக்கு விசா வழங்க மறுப்பதோ, பாகிஸ்தானிய ஹாக்கி வீரர்களை இந் தியாவில் நடைபெறும் போட்டிகளில் பங் கேற்க விடாமல் தடுப்பதோ நமது எல்லை களுக்கு அல்லது நம் குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்கிவிடாது. அது புத்தி கெட்ட குழந்தையின் நடத்தையாகத்தான் இருக்குமேயன்றி, போர்க்களத்தில் இயங்கு கிறவரின் செயல்முறையாகாது. நான்காவ தாக, 2003க்குப் பிறகு உண்மையிலேயே சில நன்மைகள் நிகழ்ந்துள்ளன. இரு தரப்புச் சண்டை நிறுத்தமும், எல்லை கடந்த பயங்கரவாதச் செயல்களின் தீவி ரத்தை மட்டுப்படுத்தியதும் அப்படிப்பட்ட நன்மைகள்தான். இதனால் ஆயிரக்கணக் கான இந்திய வீரர்கள்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

 இந்த நன்மை களைச் சீர்குலைக்கும் எதையும் செய்து விடலாகாது. எல்லா நோய்களுக்கும் முழு சிகிச்சை இல்லைதான். சில நோய்களை நல்ல முறையில் அல்லது மோசமான முறையில் சமாளிக்கத்தான் முடியும்; நிச் சயமாகக் கண்மூடித்தனமான முறையில் ரத்தம் சிந்தவைப்பதன் மூலமாக அல்ல. பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு உள்ள உறவு அப்படிப்பட்ட ஒன்றுதான்.
தி ஹிண்டுநாளேடு (ஜன.16) தலையங்கம்
தமிழில்: . குமரேசன்

நன்றி : தீக்கதிர்

1 comment: