Thursday, January 31, 2013

ஜெ வைப் பேச வைத்த கலைஞர் ஒரு கில்லாடிதான்



விஸ்வரூபம் பிரச்சினையில் வாய் திறக்காது செயலில்
மட்டும் டார்ச்சர் செய்து வந்திருந்த ஜெயலலிதாவை
பேச வைத்த கில்லாடி கலைஞர்.

விக்ரம் படத்தின் போது எம்.ஜி.ஆருக்கு ஜெ எழுதிய
கடிதத்தை வெளியிட்டு ஏதோ கமலஹாசனுக்கும்
ஜெயலலிதாவிற்கும் பூர்வ ஜென்ம பகை உள்ளது
என்ற தோற்றத்தை உருவாக்கிய அவரது சாமர்த்தியம்
கண்டு உண்மையிலேயே அசந்து போனேன்.

ஆனால் இத்தனை சாதுர்யத்தையும் தமிழக மக்கள்
நலனுக்காக பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருக்கும்.

சரி இந்த கடிதம் எப்படி கிடைத்தது?

எம்.நடராஜன் வீட்டில் சோதனை செய்த போது 
ஜெ வின் ராஜினாமா கடிதம் கிடைத்து அதை
சபாநாயகர் தமிழ்க்குடிமகன் ஏற்றுக் கொண்டு
பின்பு அது சட்டசபைக் கலவரம் வரை பிரச்சினை
ஆனதே, அப்போது கிடைத்த பொக்கிஷமா இது?

அதை இத்தனை நாள் பத்திரமாய் வைத்து இன்று
தக்க சமயத்தில் வெளியிட்டது உண்மையிலேயே
சாமர்த்தியம்தான்.

இக்கடிதம் ஜெ வின் ஆணவத்தை  நன்றாகவே
அம்பலப் படுத்தியிருக்கிறது. தமிழக மக்கள்
மனதில் அவரை மேலும் அசிங்கப்படுத்தியுள்ளது.

இன்று அவர் கொடுத்துள்ள விளக்கம் எல்லாம்
சிறு பிள்ளைகளால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினைப் பற்றி இப்போதுதான்
கவலை வந்துள்ளது. விஸ்வரூப கமலை விட
மிகச் சிறந்த நடிப்பு. ஆனால் இதை ரசிக்கத்தான்
தமிழக மக்கள் தயாராக இல்லை.

பின் குறிப்பு : 1980 ம் வருட சம்பவம் என்று ஜெ 
சொல்கிறார். ஆனால் விக்ரம் படம் வெளி வந்தது
1986 ம் வருடத்தில்தான். எனக்கு எப்படி நினைவில்
உள்ளது என்றால் அந்த வருடம்தான் நான் எல்.ஐ.சி யில்
பணியில் சேர்ந்தேன். முதல் மாத சம்பளம் வாங்கி
பார்த்த படம் விக்ரம்
 

4 comments:

  1. A GREAT LOSS TO KAMAL IS VIKRAM(ORU KODI RUBAI KANAVU) IN 1986 THE STORY WAS WRITTEN BY SUJATHA. VIKRAM TO VISWAROOPAM (V FOR VICTORY FOR EVERYONE OTHER THAN KAMAL, I THINK) GREAT LOSS TO HIM

    ReplyDelete
  2. ஜெவிடம் இதைத்தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்.
    நியாயம் பற்றி யாரும் பேச முடியுமா ?
    அவரின் குணம் அவர் இனத்தவரையே பலி வாங்கி விட்டது.
    சோ எதோ கிடைத்து விட்ட திருப்தியில் ஆடி கொண்டு உள்ளார்.

    ReplyDelete
  3. Please share the link or write about விக்ரம் படத்தின் போது எம்.ஜி.ஆருக்கு ஜெ எழுதிய
    கடிதம் ...

    ReplyDelete
  4. மிக சரியாக சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete