Tuesday, November 29, 2011

சூறையாடுவதில் சுகமோ?



தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை  மட்டுமே  அரங்கேற்றி
வரும் மத்தியஅரசின்  புதிய நாசகார செயல் சில்லறை வணிகத்தில் 
அந்நிய நேரடி முதலீட்டை  அனுமதிப்பது. 


யாருக்கு  இதனால் லாபம் ?


ஏற்கனவே  இந்திய முதலாளிகள் பலர் நுகர் பொருள் வணிகம் 
செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான 
வணிக வளாகங்கள்  இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் 
அவற்றிலே  சாமானிய மக்களால் நுழைய  முடியுமா? 
அப்படியே நுழைந்தாலும்  பொருட்களை  வாங்கத்தான் 
முடியுமா? 


ஆக நுகர்வோருக்கு  எவ்வித லாபமும் கிடையாது.


அடுத்து  விவசாயிகள். 


விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யும் பொறுப்பை
அரசு மொத்தமாக  கைகழுவும்  ஏற்பாடுதான் இது. பன்னாட்டு
நிறுவனங்கள்  கொள்முதல் செய்வது  என்பது  முன் பேர
ஊக வணிகத்தின் மூலம் மட்டுமே நடக்கும். விவசாயிகளுக்கு
அடிமாட்டு விலை கொடுத்து விட்டு இவர்கள் கொள்ளை லாபம்
சம்பாதிக்கப்போகின்றார்கள். 


இந்தியாவில் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட நான்கு கோடி
பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் 
என்பதுதான் நிகர விளைவாக இருக்கும்.


கோடிக்கணக்கான  மக்களின் வாழ்வை சூறையாடுவதில் 
சுகம் காணும் சுய நல மத்தியஅரசை  தூக்கி எறிய தயாராவோம்.
      

4 comments:

  1. எனக்கென்னவோ, மத்திய அரசு இதன் மூலம் வரப் போகும் வாட் வரி வருவாயை எண்ணி வாயை பிளந்து கொண்டிருப்பதாக படுகிறது..

    ReplyDelete
  2. இந்த நாட்டின் மிக பெரிய வேலைவாய்ப்பு அமைப்பு unorganaised sector ஆன சிறு வணிக ஸ்தாபனங்கள்,சிறுதொழில் கூடங்கள், ஹோட்டல்கள்,பட்டறைகள் முதலியன,இவைகளில் வேலை பார்பதினால் ஏதோ ஒருவேளை உணவாவது இந்த உதிரி தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது,இவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது,ஆனால் அரசியல்வாதிகள் ஊழல் செய்வதில்தான் மும்முரமாக இருக்கிறார்கள்.வெளிநாட்டு முதலிடு வந்தால் இந்த உதிரி தொழிலாளிகள் வேலை இழக்க நேரிடும்.அவர்கள் அனைவருக்கும் அரசால் வேலை கொடுக்க முடியாது,வேலை இல்லாதவன் என்ன செய்வான்,திருட்டு,கொலை,கொள்ளைகளில் ஈடுபடுவான்.என்ன செய்யபோகிறது இந்த அரசு?

    ReplyDelete
  3. ராமன்,

    சில்லரை வர்த்தகத்தில் "அன்னிய"முதலீடு என்ற ஒற்றை சொல்லின் மீது கவனம் வைத்து எதிர்க்கிறீர்கள் என நினைக்கிறேன், நீங்கள் குறையாக பட்டியலிட்டது எதுவும் புதிதாக வர வேண்டியதில்லை, எல்லாம் ஏற்கனவே அடாந்த்உக்கொண்டு தான் இருக்கு.

    //ஏற்கனவே இந்திய முதலாளிகள் பலர் நுகர் பொருள் வணிகம்
    செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிரம்மாண்டமான
    வணிக வளாகங்கள் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால்
    அவற்றிலே சாமானிய மக்களால் நுழைய முடியுமா?
    அப்படியே நுழைந்தாலும் பொருட்களை வாங்கத்தான்
    முடியுமா? //

    அப்படி எனில் பல்ப்பொருள் அங்காடியில் ஒரு லிட்டர் சூரியக்காந்த்இ என்ணை , தெருவில் இருக்கும் அண்ணாச்சி கடையை விட அதிகமா? இல்லை சர்க்கரை தான் அதிக விலையா? அதாவது மக்கள் விலையை ஒப்பிட்டு வாங்க தெரியாதவர்களா? உள்ளே போக கூடாது என யார் தடுக்கிறார்கள்.

    //விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யும் பொறுப்பை
    அரசு மொத்தமாக கைகழுவும் ஏற்பாடுதான் இது.//

    அப்படி ஆனால் இப்போது அரசே எல்லா விலைப்பொருளையும் வாங்கிக்கொண்டுள்ளதா? பிடிஎஸ் க்கு தேவையான அளவை மட்டுமே வாங்குகிரது, எங்கே வெங்காயம், வெள்ளைப்பூண்டு ,தக்காளி எல்லாம் அரசை வாங்க சொல்லுங்க பார்ப்போம்.

    //பன்னாட்டு
    நிறுவனங்கள் கொள்முதல் செய்வது என்பது முன் பேர
    ஊக வணிகத்தின் மூலம் மட்டுமே நடக்கும். விவசாயிகளுக்கு
    அடிமாட்டு விலை கொடுத்து விட்டு இவர்கள் கொள்ளை லாபம்
    சம்பாதிக்கப்போகின்றார்கள். //

    இப்பொழுதே யூக வணிகத்தில் 100 சதவீத அனுமதி இருக்கே ,. கேஷ் &கேரி மொத்த விற்பனையில் .என்னவோ இனிமே தான் அனுமதிக்கப்போராங்க என்பது போல சில்லரை வர்த்தகத்தோடா சேர்த்துக்கவலைப்படுங்களே :-))

    மேலும் யூக வணிகத்தில் வாங்கி தினசரி விற்பனைக்கு எல்லாம் கொண்டு வர முடியாது, தக்காளி, வெங்காயம் அரிசி எல்லாம் யூக வணிகத்தில் இருக்கா? இல்ல அதை எல்லாம் அப்படி டிரேட் செய்து கடைக்கு விற்பனைக்கு அனுப்ப சாத்தியமா?

    அப்போ இப்ப கமிஷன் மண்டி,வியாபாரிகள் கூட்டணி நல்ல விலைக்கு விவசாயிகளிடம் வாங்குகிறதா? ஒட்டன் சத்திரம் பகுதிக்கு போனாபாருங்க அடிக்கடி தக்காளி சாலையில் கிடந்து அரைப்படும் ,காரணம் கிலோ 50 காசுக்கு கூட எடுக்க மாட்டாங்க அப்பொ எல்லாம் ரோட்டில போட்டு போய்டுவாங்க விவசாயிகள், அதுக்கு காரணம் பெரிய வணிக சில்லரை வியாபாரிகளா?

    மேலும் விவரமாக என்ப்பதிவில் போட்டு இருக்கேன் பாருங்க!

    வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்

    ReplyDelete
  4. பொதுமக்களுக்கு, அதுவும் படித்தவர்களுக்கு துளி கூட எதைப்பற்றியும் அக்கறை இல்லை. இந்தியா அடிமையான பிறகு மட்டுமே சிந்திப்பார்கள்.

    ReplyDelete