Friday, November 11, 2011

வேலூர் மேயருடன் ஒரு சந்திப்பு - ஸ்டார்டிங் என்னமோ பரவாயில்லை.





கிட்டத்தட்ட  நான்கு மாதமாக  அலுவலகம் செல்வது என்பதே ஒரு
நரக அவஸ்தையாக உள்ளது. எங்கள் அலுவலகம் அமைந்துள்ள 
ஐடா ஸ்கட்டர் சாலையில்  பாதாள சாக்கடை திட்டத்திற்காக 
சாலைகள் வெட்டப்பட்டு, தோண்டப்பட்டு, அரைகுறையாக 
மூடப்பட்டு  ஒரே பிரச்சினைதான்.




மழை நாளில் இன்னும் சிரமம். ஒரு மாதத்தில்  பணி முடிந்து போகும்
என்று சொன்னாலும் ஆமை வேகப்பணியால்  நான்கு மாதங்கள்
கடந்த பின்னும் முடிந்தபாடில்லை.


அதனால் இன்று நாங்கள் சங்கப் பொறுப்பாளர்கள் வேலூரின்
புதிய மேயர் திருமதி கார்த்தியாயினி அவர்களைச் சந்தித்து
மனு அளித்து பிரச்சினைகளை விளக்கினோம். 


அவரும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து  சில வழிகாட்டுதல்கள்
அளித்தார். அவருடைய பிரச்சினைகள், எதிர் காலத் திட்டங்கள் 
ஆகியவை பற்றியும்  வெளிப்படையாக  பகிர்ந்து கொண்டார். 


துவக்கம் என்னவோ நன்றாகத்தான் உள்ளது. செயல்பாடு எப்படி
என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.


என்ன சுற்றியுள்ளவர்கள்  திசை திருப்பக்கூடாது. 




அதை விட ஐந்தாண்டுகளும் பணியாற்ற அம்மா கருணை 
காட்ட வேண்டும்.



 

5 comments:

  1. //அதை விட ஐந்தாண்டுகளும் பணியாற்ற அம்மா கருணை காட்ட வேண்டும்.//

    கடைசி வரி புரியவில்லையே

    ReplyDelete
  2. Sir, Please take initiative for getting rid of the ambulance/s in front of our office. Also the opposite side of the road - always filled with filth and sometimes the ambulances being washed there - really frustating scene in front of Insurance Office.

    ReplyDelete
  3. மந்திரிகளை மாற்றுவது போல இவரது பதவியை
    பறிக்காமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. தோழர் சாந்தலட்சுமி - மேயரோடுடனான சந்திப்பில் இப்பிரச்சினை குறித்தும் வலியுறுத்தியுள்ளோம்.

    ReplyDelete