மானியம் வழங்க முடியாது,
சந்தைதான் தீர்மானிக்கும்,
இப்போது உயர்த்தியது போதாது,
இன்னும் உயரும்,
எல்லாமும் உயரும்,
இந்தியாவில் வாழ
நீ செல்வந்தனாய் பிற,
இல்லையென்றால்
மூன்று பக்கம் கடல்
இன்னமும் தண்ணீர் ஓடும்
ஏராளமான நதிகள்.
கண்ணீரில் மூழ்கி
சாகாவிட்டாலும்
தண்ணீரில் குதித்து
செத்துப் போ!
ஒரு வேலை உணவு
பழங்கனவாகும்.
ஈரத்துணி கட்டினாலே
பசியும் போகும்!
துணியை தண்ணீரில்
நனைக்க
அதற்கும் விலையை
சந்தைதான் முடிவு செய்யும்
என்று சொல்வார்
இந்தியப் பிரதமர்.
நச்..
ReplyDelete