Tuesday, November 22, 2011

நரேந்திர மோடியின் கொலை லீலைகள்


நரேந்திர மோடியை கொலை செய்ய வந்த லஷ்கர் ஈ தொய்பா
தீவிரவாதிகள்  என்று நான்கு பேரை குஜராத் போலீசார் 
சுட்டுக் கொன்றது போலி என்கவுண்டர்  என்று சிறப்பு புலனாய்வு
குழு அறிக்கை  கூற, குஜராத் உயர் நீதிமன்றம் முதல் தகவல் 
அறிக்கை பதிவு செய்ய சொல்லியது. 


அகமாதாபாத் நகருக்கு வெளியே  குறிப்பிட்ட நாளில் அவர்கள்
கொள்ளப்படவில்லை, முன்பே  கொள்ளப்பட்டு அங்கே 
உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, நான்கு பேர் காவல் துறை
உடன் துப்பாக்கி சண்டை நடத்தியது என்பதும் பொய்தான்.
அவர்கள் யாரும் கையில் துப்பாக்கியை தொடவேயில்லை 
என்றும் அறிக்கை கூறுகின்றது. 


அதே போல்  கொலையானவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்
என்பதும் தவறு  என்கிறது அறிக்கை. 


ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொடூரமாக கொன்ற
அரக்கன் நரேந்திர மோடிக்கு ஆபத்து உள்ளது என்ற 
அனுதாபத்தை  ஏற்படுத்த நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டனர்
என்பது  இப்போது  தெளிவாகி விட்டது. 


வழக்கு பதிவானாலும்  மாட்டிக கொள்ளப் போவது என்னமோ
காவல்துறை அதிகாரிகள்தான் என்பது வருத்தமான 
யதார்த்தம், 


ஆனாலும் நரேந்திர மோடியின் கொலை வெறி மீண்டும்
ஒரு அம்பலமாகியுள்ளது. 


பாஜகவிற்கு பின்னடைவு தரும் செய்தியானாலும் அத்வானி
உள்ளுக்குள் மகிழ்ச்சியாய் இருப்பாரல்லவா?   

2 comments:

  1. Listen to the sayings of G.K. Pillai

    ReplyDelete
  2. அம்பலமாகி என்ன பிரயோஜனம், குஜராத்தை முன்னுக்கு கொண்டு வந்தவர் என்ற பட்டம் இருக்கிறதே

    ReplyDelete