Friday, November 10, 2023

கட்சியால் கைவிடப்பட்டவர்

 


நாடாளுமன்ற மரபுக்குழு( ETHICS COMMITTEE)  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ராவை  பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

 அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக மக்களவையில் கேள்வி கேட்க அவர் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு. அது உறுதிப்படுத்தப்பட்டதாக குழு சொல்கிறது, குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை என்று தனியாக கடிதம் (DISSENT NOTE) கொடுத்துள்ளனர். எந்த ஆதாரமும் இல்லை என்பது அவர்கள் நிலைப்பாடு. பணம் எப்படி பரிமாறப் பட்டது என்று விசாரணை செய்யுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு மரபுக்குழு அனுப்பியுள்ள கடிதமே ஆதாரமில்லாததற்கு சான்று.

 மரபுக்குழு கூட்டம் எப்படி மரபுகளை காப்பாற்றியது தெரியுமா?

 மஹூவா மொய்த்ராவிடம் கேட்ட ஒரு கேள்வி போதும்.

 “நீங்கள் வெளியூர் செல்லும் போதெல்லாம்  எங்கே தங்குவீர்கள்? யாருடன் தங்குவீர்கள்?”

 இந்த கேள்வி கேட்கப்படவுடனேயே அவரும் குழுவில் இருந்த மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளி நடப்பு செய்து விட்டனர்.

 இப்போது மரபுக்குழு பரிந்துரை கொடுத்து விட்டது.

 அவரது கட்சி என்ன நிலை எடுக்கிறது.

 மம்தா பானர்ஜி இது வரை வாய் திறக்கவில்லை.

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளவரசுப்ப்பட்டம் கட்டப்பட்ட மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி என்ன சொல்கிறார்?

 “தன்னுடைய போராட்டத்தை தானே சந்திக்கும் வல்லமை படைத்தவர் மஹூவா மொய்த்ரா”

 அதன் அர்த்தம் என்ன?

 “நாங்கள் உனக்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போட மாட்டோம். மகளே உன் சமர்த்து”

 யாருக்கு தெரியும்! அதானியின் பெட்டிகள் மம்தாவிற்கும் போயிருக்கலாம் . .

 பாவம்! அனல் பறக்கும் பேச்சாளர் . . .

 

No comments:

Post a Comment