Thursday, April 8, 2021

அரக்கோணம் கொலை – எது நடக்கக் கூடாதோ

 


கடந்த முறை மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் நாளன்று சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் காட்டுமன்னார் கோயில் ஒன்றியத்தின் பொன்பரப்பி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வெறியாட்டம் ஆடி தலித் மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர்.

இந்த வருடம் அப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று மனதில் ஒரு சின்ன நிறைவு இருந்தது.

அப்படியெல்லாம் மன நிறைவு அடைய விட மாட்டோம் என பாமகவினர் மீண்டும் தங்கள் ரௌடித்தனத்தை  தொடங்கினர்.

அரக்கோணம் தொகுதி சோகனூரில் பாமகவினர் நடத்திய தாக்குதலில் இரண்டு தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதிலே ஒருவருக்கு 15 நாட்களுக்கு முன்பும் இன்னொருவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பும்தான் திருமணம் ஆகியுள்ளது. இன்னும் மூவர் உடல் நிலை கவலைக்கிடமாக் உள்ளது.

ஆண்ட பரம்பரை எனும் போலிப் பெருமையால் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்குவது என்பது பாமகவிற்கு வாடிக்கையாகி விட்டது.

சீமான் முட்டாள் சீடர்களை உருவாக்குகின்றார் என்றால் டாக்டரய்யாக்கள் கொலைகார தொண்டர்களை உருவாக்குகின்றனர்.

சிறைக்கு போகப் போவது கொலை செய்தவர்கள். மருத்துவரய்யாக்கள் தைலாபுரம் தோட்டத்தில் சொகுசு வாழ்க்கையை தொடர்வார்கள்.

எதிர்கால சந்ததியையாவது இவர்கள் வன்முறைச் சதியின் பிடியிலிருந்து பாதுகாக்க பாமக வை தடை செய்ய வேண்டும். இதைத்தவிர வேறு வழி கிடையாது.

கொல்லப்பட்டவர்கள் என் ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.

2 comments:

  1. அவர்கள் வெறியூட்டும் அதே சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு என்ன வகையான கல்வியை அளித்திருக்கிறோம். அவர்களை அந்த பாழும் கிணற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம் தோழர்களுக்கு இருக்கிறது. அதை நாம் உணரவேண்டும்.

    ReplyDelete
  2. சமநோக்கு பார்வையுடன் அற்புதமான பதிவு. இந்த மாதிரி வன்முறையாளர்களுக்கு இது போன்ற பதிவுகளை படிக்க தெரியாது. படித்தாலும் புரியாது. புரிந்தாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட மனம் மாறாது. தூண்டி விடுபவர்கள் தப்பித்து விடுவதால் அடுத்து அடுத்த மனிதர்களை மிருகங்களாக ஆக்குவார்கள்.

    ReplyDelete