“தூத்துக்குடி
 ஸ்டெரிலைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர்.
அவர்கள்தான் பஸ்ஸை கொளுத்தி கலவரத்தை தூண்டினார்கள். அதனால்தான் துப்பாக்கிச் சூடு
நடந்தது”
 இந்த
வீர வசனத்தை பேசி பரபரப்பை உண்டாக்கிய ரஜினிகாந்த், விசாரணைக் கமிஷனுக்கு வர வேண்டும்
என்று நோட்டீஸ் அனுப்பியதுமே பயந்து பம்மி பதுங்கி விட்டார்.
 நான்
வந்தால் ரசிகர்கள் திரண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்றும் கொரோனாவை காரணம்  காட்டியும் விசாரணைக்குச் செல்லாமல் தப்பித்துக்
கொண்டிருந்தார்.
 “தூத்துக்குடி
ஸ்டெரிலைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவி விட்டனர்” என்று நான் சொன்னதற்கு
எந்த ஆதாரமும் இல்லை என்று ரஜினி இப்போது விசாரணைக் கமிஷனுக்கு பிரமாண வாக்குமூலம்
அனுப்பி உள்ளார்.
 எந்த
ஆதாரமும் இல்லாத போது போராட்டக்காரர்களை கொச்சைப் படுத்தி பேச வேண்டிய தேவை என்ன?
 ரஜினி
யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை பேசுவதை சினிமாவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால்
இப்படித்தான் அசிங்கப்பட வேண்டும்.
 அதிலும்
அந்த விஷ மூர்த்தி பேச்சை கேட்டால் மேலே உள்ள படத்தில் இருப்பதுபோல  ரத்தக் களறி ஆகி விடும்.
இனிமேலாவது
கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். 
 
 
No comments:
Post a Comment