Thursday, April 22, 2021

உ.பி ஆகிறதா தமிழகம்?

 கவலை அளிக்கும் செய்தியும், கண்டன அறிக்கையும்



*வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் 7பேர் மரணம்*
*காரணம் தேடும் அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக்குழுவின் சார்பில் கண்டிக்கிறோம்*
--------------------
நேற்றைய தினம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். பிரச்சனைகளை கண்டறிந்து அதை களைந்து தீர்வை எட்டுவதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகமும் மருத்துவ மனை நிர்வாகமும் காரணங்கள் தேடி வருகின்றனர்.

ஆக்சிஜன் சிலிண்டர் போதுமான அளவில் இருப்பு இருக்கிறது. இறந்தவர்களில் மூன்று பேர் கொரோனா நோயாளிகள் என காரணங்கள் கண்டுபிடித்து நிர்வாகத்தால் சொல்லப்படுகிறது.

ஆனால் கேஸ் பிளாண்டில் இருந்து வார்டுகளுக்கு ஆக்சிஜன் செல்லும் வழியில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கேஸ் உறைந்திருக்கிறது.எனவே கேஸ் சீராக செல்லாமல் தடை ஏற்பட்ட காரணத்தால், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சீராக தடையின்றி கிடைக்காததால் தான் உயிரிழப்பு நேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கொரோனா காலத்தில் மிக சிறப்பாகவே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை செயல்பட்டு உள்ளது.இருப்பினும் இத்தகைய நிகழ்வு மருத்துவ மனை குறித்து தவறான புரிதலை மக்களிடம் ஏற்படுத்தி விடும் என கருதுகிறோம்.

எனவே தொழில் நுட்ப கோளாறுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையை மருத்துவ மனை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனாவால் இறந்தார்களா நோய் பாதிப்பால் இறந்தார்களா என காரணம் தேடுவதை கைவிட்டு மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை கணக்கில் கொண்டு தவறிழைத்தவர்களை தண்டிப்பதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிடவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று 

*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக்குழுவின் சார்பில்* கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
எஸ்.தயாநிதி
மாவட்டச் செயலாளர்

சென்னை போன்ற நகரங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக இன்றைய நாளிதழ் செய்திகள் சொல்கிறது.

அலட்சியத்தை தள்ளி வைத்து அரசுகள் முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது.

No comments:

Post a Comment