எத்தனை
பேருக்கு நினைவில் இருக்கும் என்று தெரியவில்லை. சரியாக பத்து வருடங்களுக்கு முன்பாக
இதே நாளில்தான் மாநிலங்களவை மகளிர் மசோதாவை நிறைவேற்றியது.
அந்த
தருணத்தில் அடுத்த சில நாட்களில் மக்களவையும் இம்மசோதாவை நிறைவேற்றி விடும். அடுத்து
வரும் தேர்தலிலேயே நாடாளுமன்றத்திற்கும் சட்ட மன்றங்களுக்கும் 33 % பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு
விடுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது.
ஆனால்
அந்த நம்பிக்கை கானல் நீராகி விட்டது. மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா மக்களவைக்கு
வரவேயில்லை. சந்திராயன் நிலவுக்குப் போனது, மாநிலங்களவைக்கும் மக்களவைக்கும் தூரம்
அதை விட அதிகம் போல.
காங்கிரஸ்,
பாஜக போன்ற கட்சிகளுக்கு இம்மசோதாவை நிறைவேற்றும் விருப்பம் இல்லாத காரணத்தால் லாலுவும்
முலாயமும் செய்த அமளிகளை காண்பித்து தாமதித்தார்கள்.
மோடி
அரசில் இம்மசோதா பற்றிய பேச்சே கிடையாது. காங்கிரஸ் கட்சியும் இதை மறந்து விட்டது.
மகளிர் மசோதா நிறைவேறியிருந்தால் தற்போதைய மக்களவையில் 174 பெண் எம்.பி க்கள் இருந்திருப்பார்கள்.
ஆனால் இப்போது இருப்பதோ வெறும் 78 பேர்தான். அமைச்சர்கள் எண்ணிக்கையும் அது போலதான்.
மோடியின் அமைச்சரவையில் மூன்று பெண்கள்தான் கேபினெட் அமைச்சர்கள்.
பெண்கள்
வேலைக்கு போவதே ஒழுக்கக்கேடு என்று சொல்கிற காவிச் சித்தாந்தம் பெண்கள் அரசியல் அதிகாரம்
பெறுவதை எப்படி ஏற்கும்?
ஆட்சி
மாறாமல் மசோதா சாத்தியமில்லை என்பதுதான் கசப்பான யதார்த்தம்.
ஆனால்
அதற்காக அதனை நாம் மறந்து விடக் கூடாது. தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருக்க
வேண்டும்.
வலைத் திரட்டி உலகில் புதிய புரட்சி, வந்தது : வலை ஓலை எனும் புதிய செய்தி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது பத்து வருடங்கள் முடிந்த பின்னும் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், விரைவில், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
ரஷ்ய புரட்சியே மறுபடி நடந்தாலும் நீங்கள் சொல்வது நடப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
ReplyDelete