Sunday, March 15, 2020

57 கோடி செல்லா நோட்டு குடிமகன்கள் கொடுத்ததா?


வருமான வரித்துறைக்கும் டாஸ்மாக்கிற்கும் ஒரு சண்டை துவங்கி உள்ளது.

செல்லா நோட்டு என அறிவித்த பின்பு டாஸ்மாக் 138 கோடி ரூபாய் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கட்டியுள்ளது.

அதிலே டாஸ்மாக் கணக்கின் படி செல்லா நோட்டு என்று அறிவிக்கப் பட்ட 8 நவம்பர் அன்று அவர்கள் கணக்கில் இருந்த செல்லா நோட்டுக்களின் மதிப்பு 81 கோடி ரூபாயாம். 

1000, 500 ரூபாய் நோட்டுக்களை வாங்கக் கூடாது என்ற அரசு அறிவிப்பு வந்த பிறகும் டாஸ்மாக் செல்லாத நோட்டுக்களை 57 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள். இது சட்ட விரோதம் என்று வருமான வரித்துறை சொல்லியுள்ளது.

செல்லாத நோட்டுக்களை வாங்காவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்பதால் வாங்கினோம் என்று டாஸ்மாக் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என மறுக்கிறது வருமான வரித்துறை.

என்னுடைய கேள்வி ஒன்றுதான்.

அந்த 57 கோடி ரூபாய் நிஜமாகவே குடி மக்கள் கொடுத்ததுதானா?

அதிகாரிகள், அரசியல்வாதிகள் வைத்திருந்த செல்லா நோட்டுக்களை மாற்ற டாஸ்மாக்கை பயன் படுத்திக் கொண்டார்களா?


No comments:

Post a Comment