Thursday, March 26, 2020

தின மலர் தலைப்புக்களை மறக்க முடியுமா?



தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முதல் எண்ணற்ற மக்கள் போராட்டங்களை காவல்துறை தடியடி கொண்டு ஒடுக்கிய போது விதம் விதமான தலைப்புக்களைக் கொடுத்து தன் வக்கிரத்தை வெளிப்படுத்திய பத்திரிக்கை தின மலர்.

காவல்துறையின் வெறியாட்டங்களை அது என்றுமே நியாயப்படுத்தித்தான் எழுதியுள்ளது.

இன்று தினமலர் பத்திரிக்கை போடுபவர்களை எங்கோ போலீஸ் தாக்கிய உடன் மனித உரிமை வேடம் புனைகிறது. போலீஸ் லத்தி எதற்கு என்று தலைப்பு கொடுக்கிறது.

இதன் மூலம் தின மலர் திருந்தி விடும் என்று நினைத்தால் நாம்தான் ஏமாந்து போவோம்.

நாகத்தின் நச்சு என்றும் மாறாது.

நாளை போராடுபவர்கள் மீது காவல்துறையின் குண்டாந்தடி பாயும் போது அப்போதும் வக்கிரமான தலைப்புக்களோடு அதை கொண்டாடும்.


1 comment:

  1. பின்ன "பட்டக்ஸ்" லையே திரும்ப திரும்ப அடிச்சா நாங்க சும்மா இருக்க முடிமா ??? எங்க பேப்பர் பாய்களுக்கும் வலிக்கும்ல ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete