Wednesday, March 18, 2020

ரயில்வேயின் கொரோனா கொள்ளை


கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது என்ற பெயரில் ரயில்வே ஒரு பகற்கொள்ளையை நிகழ்த்தியுள்ளது.



இருநூற்றி ஐம்பது ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டை பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாயாக உயர்த்தியுள்ளது.

வேடிக்கை பார்ப்பதற்கென்று யாரும் ரயில் நிலையத்திற்குள் வருவது கிடையாது. பெரும்பாலும் முதியவர்களையும் பெண்களையும் அதிக லக்கேஜ் இருந்தாலோ மட்டுமே வழியனுப்ப வருவார்கள். அவர்கள் பாக்கெட்டிலிருக்கும் பணத்தை பறிக்கும் வழிப்பறிக் கொள்ளையர்களாக ரயில்வே மாறியுள்ளது கண்டனத்திற்குரியது.

மார்ச் 31 வரை மட்டுமே என்று இப்போது விளக்கம் சொல்லப்படுகிறது. அது வரை கூட இந்த நடவடிக்கை சரியல்ல.

மேலும் உயர்ந்த கட்டணத்தை குறைக்கும் வழக்கம் இந்த அரசுக்கு என்றைக்கும் கிடையாது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலன் நுகர்வோருக்கு கிடைக்காத படி கலால் வரியை உயர்த்தி அம்பானிக்கு சகாயம் செய்த கயவர்கள் அல்லவா இவர்கள்!

4 comments:

  1. Well, A nation deserves its Leaders my Friend! India asked for it!. All the best, though! Stay Strong and Stay Hopeful!

    ReplyDelete
  2. 70 வயதுக்கு மேற்பட்டவர்களும் சுகவீனமுற்ற அவர்களும் பத்துல ஒருத்தர் மிக விரைவில் வரும் கோரோநா அலையில் தப்ப மாட்டார்கள் அது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இப்படி எழுதுறீங்க

    ReplyDelete
  3. கண்டிக்கத்தக்க செயல்

    ReplyDelete
  4. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 15 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது ரயில்வேயின் கொரோனா கொள்ளை பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete