Saturday, June 8, 2019

இந்தி - இதிகாசப் பொய்

எங்களின் மூத்த தோழர் சியாமளம் காஷ்யபன் அவர்களின் ஒரு அனுபவப் பகிர்வை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

இந்தி தெரியாத காரணத்தால் என்னுடைய கூர்க்காவோடு பேச முடியவில்லை என்ற எஸ்.வி.சேகருக்கு இதை சமர்ப்பிக்கிறேன். 

உனக்கு இந்தி தெரிந்திருந்தாலும் கூட அப்போதும் உன்னால் அந்த கூர்க்காவோடு பேசியிருக்க முடியாது. 

ஆம். 

கூர்க்காவின் மொழி இந்தி அல்ல.





ஒரு 
இதிகாசப் 
"பொய்"

1996 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. வட மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டி இடும் இடங்களில் செய்தி சேகரிக்க விரும்பினேன் . கல்கத்தா சென்று திரிபுரா, வாரணாசி, வார்தா, பீட் என்று திட்டமிட்டேன். உதவியாக மொழிபெயர்ப்பாளர் முத்து மீனாட்சி அவர்களையும் அழைத்துக்கொள்வது என்று முடிவு செய்தேன்.

கல்கத்தா சென்றதும் அலிமுதின் சாலையில் உள்ளமார்க்சிஸ்ட் கடசி அலுவலகம் சென்றோம். அப்போது அங்கு பீமன் பாசு இருந்தார் அவரிடம் திரிபுரா செல்ல விமான பயண ஏற்பாடுகள் செய்ய உதவுமாறு கேட்டுக்கொண்டேன். சிரித்து விட்டு "நீங்கள் திரிபுரா செல்ல வேண்டாம். இங்கேயே ஸத்காசியா செல்லுங்கள்" என்றார் . 

ஸத்காசியாவில் ஜோதிபாசு நிற்கிறார். இன்று மதியம் அவர் ஸத்காசியா செல்கிறார் .அவருடைய convoy கூட சென்று வர ஏற்பாடாகிற்று.

முதல்வர் காருக்கு அடுத்து மருத்துவ குழு அதற்கு அடுத்த ஜீப்பில் நானும் முத்து மீனாட்ச்சியும் .செல்லும் வழியெங்கும் மக்கள் கூட்டம். பாசு வை கை ஆட்டி வரவேற்கும் மக்கள் முத்து மீனாட்ச்சிக்கு பெருமை பிடிபடவில்லை. அந்த பயணத்தை வாழ்வில் மறக்க முடியாது .

நாங்கள் செல்லும் வழியில் தான் மமதாவின் தொகுதியும் இருந்தது. முதல்வர் சில இடங்களில் நிற்க வேண்டியதாயிற்று. நாங்கள் முந்தி விட்டோம். கல்கத்தாவின் புறநகர் பகுதி. அதுவும் மமதாவின் தொகுதி தான். convoy வருவதற்காக காத்திருந்தோம். நானும் முத்து மீனாட்ச்சியும் ஜிப்பை விட்டு இறங்கி அங்கு நடந்து செல்பவர்களிடம் பேச முற்பட்டோம். தோழர் இவர்களுக்கு வங்கமொழிதான் தெரியும் என்றார் கூட வந்தவர் .

நகரத்தை தாண்டி 10 மைல் கல்லில் இந்தி பயன்படவில்லை. 

"நீங்கள் நேரடியாக ஸத்காசியா சென்றுவிடுங்கள்" என்று செய்தி வந்தது நாங்கள் புறப்பட்டோம். கிட்டத்தட்ட 30 மைல் தூரம் இருக்கலாம் வழியில் டயர் மாற்ற நிற்கவேண்டியதாயிற்று.. நாங்கள் இருவரும் இறங்கி காலாற நடந்தோம்.

இருபுறமும் வயல் வெளிகள். நடுவில் சாலை. சாலையின் இருபுறமும் நீரோடைகள் சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தன ஓடைக்கரையில் வாழைமரங்கள். இவை அந்த வயல்காரர்கள் பராமரிப்பில் இருந்தன. வாழை இலை,வாழைப் பூ .பழம் எல்லாம் அவர்களுக்கு சொந்தம் .அவற்றை பாதுகாப்பது அவர்கள் கடமை.

தூரத்தில் இருக்கும் விவசாயி ஒருவரை நெருங்கினேன்.நம்ம ஊரு கருப்பசாமி அல்லது பலவேசம் போல் கருப்பாக வேட்டியை தார் பாச்சி கட்டிக்கொண்டு தலையில் துண்டை தலைபாகையாக்கி நின்றார். அவரிடம் பேச முற்பட்ட போது அவருக்கு வங்க மொழி தவிர வேறு தெரியாது என்று அறிந்தோம். 

ஸத்காசியாவில் கூட்டம். எங்களை மேடை அருகில் அமர செய்தனர்.. யாருக்கும் வங்க மொழி மட்டுமே தெரியும். முதல்வரும் வங்க மொழியில்தான் பேசுவார் என்கிறார்கள் நடுங்கி விட்டேன்.

நல்லகாலம் ndtv நிருபர் திருமதி தீபா இருந்தார்அவரிடம் மொழிபெயர்க்க உதவி கேட்டேன்..அவருடைய மகளை உதவ சொன்னார். 

பாசு வங்கமொழியில் பேச அந்த பெண் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நான் குறிப்பெடுத்துக் கொண்டேன்.

இந்தி தெரிந்தால் வட இந்தியா முழுவதும் சமாளிக்கலாம் என்பது

ஒரு இதிகாசப் பொய்  
என்பதையும் உணர்ந்தேன்.

4 comments:

  1. கிராமவாசிக்கு இந்தி தெரியாமல் இருக்கலாம். ஆனால் நகரங்களில் வியாபார ஸ்தலங்களில் இந்தி சர்வ சாதாரணமாகப் பேசப்படுகிறது. உங்கள் மாதிரி ஆட்கள்தான் தமிழனின் உண்மையான எதிரி.

    ReplyDelete
    Replies
    1. இந்தியை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் இந்தி திணிப்பை எதிர்க்காமல் ஆதரிப்பவர்கள் தமிழுக்கு எதிரிகள்

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Sir
    I think Mr.Kandasamy Ayya's statement is fully correct. In present how many children studying Tamil in English mediums?

    ReplyDelete