Thursday, June 20, 2019

ஏன் கேரளத் தண்ணி வேணாம் எடப்பாடி?
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் நிலவுகிற தண்ணீர் பஞ்சத்தினை சமாளிக்க தமிழகத்திற்கு உதவும் பொருட்டு தினசரி இருபது லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு அனுப்ப கேரள அரசு முன் வந்துள்ளது.

தோழர் பினராயி விஜயனின் இந்த முன்மொழிவை கேரள முதல்வர் அலுவலகத்திலிருந்து தமிழக முதல்வர் அலுவலகத்தில் தெரிவித்து உள்ளனர். 

உங்கள் மாநில தண்ணீர் அவசியமில்லை என்று எங்கள் முதலமைச்சர் மறுத்து விட்டதாக நம் மாநில அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்?

ஏன் எடப்பாடி ஏன்?

கேரளாவிலிருந்து தண்ணீர் வந்தால் உமக்கு என்ன பிரச்சினை?

தண்ணீர் பஞ்சம் என்பது மாயை என்ற உமது அறிக்கை பொய்த்துப் போய் விடும் என்பதாலா?

கேரள மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றால் உங்க எஜமான் மோடி கோவித்துக் கொள்வார் என்பதாலா?

தண்ணீர் இல்லாமல் கழிவறைகள் பூட்டப்பட்ட அரசு மருத்துவ மனையில் படுத்துக் கொள்ளாமல் நாம்தான் அப்பல்லோவில் அட்மிட் ஆகியுள்ளோமே! கேரளத் தண்ணீர் நமக்கு தேவையில்லை என்ற அலட்சியமா?

நாடாளுமன்றத் தேர்தலில் நம்மை தோற்கடித்த மக்கள் தண்ணீருக்காக அலைந்து சாகட்டும் என்ற நல்லெண்ணமா?

ஏன் எடப்பாடி? ஏன்? 


5 comments:

 1. "கேரள மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றால் உங்க எஜமான் மோடி கோவித்துக் கொள்வார் என்பதாலா?"-இல்லேங்கன்னா! உங்களுக்கு தமிழ் நாட்டின் அரசியல் (அதாவது பணம் பண்ணும் முறை , வழி மொத்தமா தெரியலை என்று நினைக்கிறேன்).மன்னிக்கணும்...நீங்க வளரனும்...(அதாவது, அதிமுக செய்யும் ஊழல் பற்றி அரியனும்).

  ஏன் கேரளத் தண்ணி வேணாம்?எடப்பாடி?
  -----உண்மையானகாரணம்!~

  தமிழ்நாடு வறண்ட பாலைவனமாக இருந்தால் தானே, ரத்தத்தின் ரத்தங்கள் தண்ணீர் லாரி ஒட்டி "ஒண்ணுக்கு ஐந்தா' காசு பார்க்கமுடியும்.ரத்தத்தின் ரத்தங்கள் அப்பத்தானே வறண்ட தமிழ் நாட்டில் போர் போட்டு காசு பாக்கமுடி

  காய்ந்த ஆறுகளில் குவாரி (quarry) அமைத்து காசு பண்ணமுடியும். ஆம். அடையார் ஆற்றின் நடுவில் இந்த "இந்து மஹா பாதகர்கள்" ஒரு இயங்கும் குவாரி (quarry} அமைத்து பணம் பண்ணுகிறர்கள். அவர்கள் நோக்கம்....ஆற்றில் தண்ணீர் வராகி கூடாது.

  பின்குறிப்பு: வள வள என்று எழுதாமல், சுருங்க சொன்னால், இந்துவதா பிஜேபி பார்ப்பனரக்ள் எடப்பாடி முதுகில் ஏறி சவாரி செய்து அவரை பண்டார ஜனதா கட்சியின் டயர் நக்கியாக மாற்றியுள்ளார் -இதற்கு பரிகாரம்---டயர் நக்கிகளை அடித்த இமாலய கொள்ளையை---கண்டுக்காமல் விட்டால்---நாங்கள் டயர் நக்கிகள் -10% பார்ப்பானுக்கு ஒதிக்கீடு, நீட் எக்ஸாம் மூலம், எல்லா இந்தியாக்காரனுக்கும் மெடிக்கல் செஅட் கொடுங்க...

  ஆனா, எங்களை, அதிமுக, டயர் நக்கி அடிமைகளை (அதான்...நாங்கள்) CBI -இடம் மாட்டிவிடவேண்டாம்...

  ReplyDelete
 2. கேரளா குடிநீர் கருஞ்சாலி பொடி பதிமுகம் எல்லாம் போட்டு சிவப்பு (cpm) கலரில் இருக்கும்.
  Jayakumar

  ReplyDelete
 3. கொள்ளை அடிக்க முடியாது.
  இதுவே ஆப்பிரிகாவில் இருந்து தண்ணீர் என்றால் முதலில் அடிமைகள் நிற்பார்கள்.

  ReplyDelete
 4. Rajarathinam ChakravarthyJune 22, 2019 at 1:18 PM

  கேரளாகாரன் கொடுக்கின்றான் என்று கூறிய 20 லட்சம் லிட்டர் தண்ணீர் இருக்கு இல்லையா, பழைய மஹாபலிபுர சாலையில் உள்ள நிறுவனங்களில் பணி புரியும் ஆளுங்க ஆய் போய்ட்டு flush செய்யுற ஒருநாள் அளவு தண்ணீர் தான். அந்த தண்ணீரை நிராகரித்த அதிகாரிகளுக்கு வணக்கங்கள்.

  நமக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை தர துப்பில்லாத கேரளா, நீதிமன்ற உத்தரவை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு அணையின் தண்ணீர் அடியின் உயரத்தில் விளையாடும் கேரளா, நமது தண்ணீரின் பற்றாக்குறைக்கு நாய்க்கு பிஸ்கெட் போடுவது போல பாவனை செய்வது எல்லாம் நரித்தனம்.

  பாஜக பொது எதிரி அவ்வளவு தான்,

  https://www.facebook.com/rajarathinamc/posts/10218990808910665

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கு கழுவக் கூட தண்ணியில்லாம கதறுங்க

   Delete