Thursday, June 20, 2019

முன்னுரிமை இதற்குத்தான் மோடி



இந்த படத்தை முழுமையாக (காயம் மறைக்கப்பட்டுள்ளது)  பார்க்கும் போதே பதறியது.

 செய்தியை  படிக்கும் போது இன்னும் அதிகமாக பதறியது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் வார்தா வில் ஒரு ஆலயத்துக்குள் நுழைந்த ஒரு தலித் சிறுவனின் ஆடைகளை அகற்றி வெறும் தரையில் வெயிலில் உட்கார வைத்ததில் அச்சிறுவனின் பின் பக்கம் வெந்து போய் விட்டது.

காட்டுமிராண்டித்தனம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்று ஜனநாயக விரோதமான ஒரு நடவடிக்கைக்காக நேரத்தை வெட்டியாக விரயம் செய்வதற்குப் பதிலாக

"அனைவருக்குமான நாடு, அனைவருக்குமான உரிமைகள்"

என்று சிந்தித்து அதனை அமலாக்க முயற்சி செய்யவும் மோடி. 

இதுதான் உடனடித் தேவை

4 comments:

  1. வெறி நாய்கள்

    ReplyDelete
  2. ஜெய்பூர் நகரில் கோவில் வெளியே சக மனிதனை இழிவாக நடத்துவதை பார்த்துள்ளேன். தவழ்ந்து செல்கிறார்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. செய்தியைப் படிக்கும்போது கோபமும் வருத்தமும் ஒருங்கே வந்தன.

    //காட்டுமிராண்டித்தனம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?// - அப்படி இதனைக் கடந்துபோக முடியாது. சக மனிதனை மதிக்கத் தெரியாதவன் உயிரோடு இருப்பதில் என்ன அர்த்தம்? கோவில் சமூகத்துக்கானது. அதில் நுழைய மனிதர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமை உண்டு (கோவில் நடைமுறைகளை மதிக்கும் அனைவருக்கும்).

    ReplyDelete