Friday, November 30, 2018

வலையில் சிக்கிய அனாமதேயங்கள்


பிணராயி விஜயன் ஏன் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை?புதுடெல்லி அரசு புதிய பென்ஷன் திட்டத்தினை ரத்து செய்து பழைய திட்டத்திற்கு மாறுவது என்று எடுத்த முடிவைப் பற்றி செவ்வாய் அன்று பதிவிட்டிருந்தேன்.

படிக்காதவர்களுக்காக அந்த பதிவின் இணைப்பு இங்கே உள்ளது

ஒரு முக்கியமான தகவலை அனாமதேயங்களுக்காகவே தவிர்த்துள்ளதாகவும் அதிலே குறிப்பிட்டிருந்தேன். அனானிகளுக்காக விரித்த வலை அது. எதிர்பார்த்தது போலவே இரண்டு அனானிகள் சிக்கிக் கொண்டார்கள்.

அனானிகள் போட்ட பின்னூட்டமும் அதற்கு நான் அளித்த பதிலையும் இங்கே ஒரு தனி பதிவாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

Why Edappadi only? Why Not Kerala CM? Does he not learn from Kejriwal? A typical hypocrite post of a communist. Before advising other states, you implement in your own kerala.

ஏன் எடப்பாடிதான் கத்துக்கனுமா? பினராயி கத்துக்க வேண்டாமா? கேரள மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்ல ரத்து செய்ய சொல்லு. 
நான் அளித்த பதில் கீழே உள்ளது.

ஹாஹா. இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அனானிகளின் புத்திகூர்மையை பரிசோதிக்க ஒரு முக்கிய தகவலை எழுதவில்லை என்று சொன்னதே இது போன்ற அபத்தமான பின்னூட்டம் வரும் என்றுதான்.

தெளிவா எச்சரிக்கை கொடுத்தும் அவசரப்பட்டு நான் விரிச்ச வலையில இப்படி வந்து சிக்கிட்டீங்களே!

புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதனை முதலில் ஏற்க மறுத்தது மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசு. அந்த முடிவை மட்டும் மம்தா அரசு இன்னும் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது.

கேரளாவில் அப்போது ஏ.கே.அந்தோணி அரசு.  காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும் அரசு ஊழியர்களின் கடுமையான போராட்டத்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போராட்டத்திற்கு ஆதரவு தந்ததாலும் அந்தோணி அரசால் புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்ற முடியவில்லை. அந்தோணியின் முடிவையே அவருக்குப் பின் முதல்வரான உம்மன் சாண்டியும் பின்பற்ற வேண்டியிருந்தது.

பிறகு மத்தியிலும் ஆட்சி மாற்றம், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம். மன்மோகன் ஆட்சிக்காலத்தில் புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாறச் சொல்லி நிர்ப்பந்தம் வந்தாலும் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் உறுதியாக மறுத்து விட்டார். தோழர் அச்சுதானந்தன் எடுத்த முடிவை மீண்டும் ஆட்சிக்கு வந்த உம்மன் சாண்டி தொடர வேண்டியிருந்தது.

கேரளாவில் புதிய பென்ஷன் திட்டத்தை அமலாக்க முடியாது என்பதில் அங்கே உள்ள அரசு ஊழியர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கறாராக இருப்பதால் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது எடப்பாடியும் மற்ற மாநில முதல்வர்களும்தானே தவிர தோழர் பிணராயி விஜயன் அல்ல.

புதிய பென்ஷன் திட்டத்தை திரிபுராவிலும் அமலாக்காமல் இத்தனை நாள் தோழர் மாணிக் சர்க்கார் பார்த்துக் கொண்டார். ஆனால் கோமாளி பிப்ளப்தேவ் குமாரின் அராஜக அரசு அதனை இப்போது அறிமுகம் செய்துள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் எடுத்த நல்ல முடிவு மத்தியரசிற்கும் மற்ற மாநில அரசுகளுக்கும் ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. அது போலவே போராட்ட களத்தில் நிற்கும் மத்தியரசு, மாநில அரசு, வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

பிகு

இந்த பின்னூட்டங்கள் மூலம் காவிகளோ அல்லது இதர சிவப்பு அலர்ஜிக்காரர்களோ அவர்கள் எல்லாம் எந்த அளவிற்கு இடது முன்னணி அரசின் மீதும் தோழர் பிணராயி விஜயன் மீதும் வெறுப்போடு உள்ளார்கள் என்பது தெரிகிறது. உங்களின் வெறுப்பே அவரது சிறப்பான மக்கள் நலப் பணிக்கு சான்று . .


3 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. திமுக தொண்டன்December 5, 2018 at 9:16 AM

  இந்த பதிவுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றாலும் என் கருத்தை கூறிக்கொள்கின்றேன்
  எமக்கு சிவப்பு அணி மீது எந்த காழ்ப்பும் இல்லை

  ஆனால் கடந்த தேர்தலில் சிவப்பு அணியினர் தனி அணி தொடங்கி திமுகவுக்கு தோல்வி தந்தனர் . இன்றைய நிலைக்கு அன்றைய மூன்றாம் அணிதான் காரணம்

  இன்று திமுக தனது நிலையை தெளிவாக கூறி எவருடனும் கூட்டணி இல்லை என்று சொன்ன பின்பும் முத்தரசன் ஆதரவு தெரிவித்து கொண்டிருக்கின்றார்

  இந்த நிலையை அன்றே எடுத்திருந்தால் தமிழகம் இந்த நிலைக்கு வந்திருக்குமா ?

  அது மட்டுமல்ல சிவப்பு அணியினர் திராவிட கொள்கையை ஏற்றுக்கொள்வதில்லை
  அது ஒரு முக்கிய காரணம்

  சரி பிரணாய் விஜயனுக்கு போவோம்
  நாம் அவரை ஏன் முட்டு கொடுக்கணும் ? முல்லை பெரியாறு விடயத்தில் அவர் நடந்து கொண்டது நியாயத்துக்கு அப்பால் பட்ட்து.

  மலையாளிகள் தங்கள் மாநிலம் என்று வந்தால் கட்சி வேறுபாடு இன்றி தங்கள் இன நலம் என்று இருக்கிறர்ர்கள்

  ஆனால் தமிழக சிவப்பு போராளிகள் கட்சி நலனை மட்டுமே கருத்தில் கொள்கின்றார்கள்
  மலையாள சிவப்பு போராளிகள் மனம் புண்பட கூடாது என்று மௌனமாக இருக்கின்றார்கள்

  ReplyDelete
 3. விரிவாக பதிலளிக்க வேண்டிய விஷயம் இது. திமுக மீதும் பல விமர்சனங்களை வைக்க முடியும். அதற்கான நேரம் இது இல்லை. மோடியின் ஆட்சியை வீழ்த்த அனைவரும் கரம் கோர்க்க வேண்டிய நேரம் இது. ஆகவே பதில் இப்போது அவசியமில்லை என்று கருதுகிறேன்

  ReplyDelete